விஜய் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராமே: சொல்கிறார் ஸ்ரேயா கோஷல்
சென்னை: இளைய தளபதி விஜய் ஒரு சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார் என்று பாடகி ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பான ஜில்லா படத்தில் விஜய் நடிக்க மட்டும் செய்யவில்லை. மாறாக ஒரு பாடலையும் பாடியுள்ளார். கண்டாங்கி கண்டாங்கி என்று துவங்கும் பாடலை அவர் ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து பாடியுள்ளார்.
இந்த பாடல் குறித்து ஸ்ரேயா கூறுகையில்,

இமான்
இமானுடன் சேர்ந்து பணியாற்றுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு அருமையான பாடல்களை தந்துள்ளார் என்று தெரிவித்தார் ஸ்ரேயா.

கண்டாங்கி
கண்டாங்கி கண்டாங்கி பாடல் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல். அது அழகான பாடல் என்பதால் மட்டும் அல்ல என்னுடன் அந்த பாடலை பாடிய பாடகராலும் தான் என்றார் ஸ்ரேயா.

சூப்பர் ஸ்டார்
கண்டாங்கி பாடலை என்னுடன் சேர்ந்து பாடியவர் வேறு யாரும் இல்லை. அவர் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார் விஜய் என்று நெகிழ்ந்தார் ஸ்ரேயா கோஷல்.

விஜய் அண்ணா
விஜய் அண்ணா இவ்வளவு அழகாக பாடுவார் என்று எனக்கு தெரியாது. அது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இனிய விருந்து. விஜய்யுடன் முதன்முதலாக ஜோடியாக காதல் பாட்டு பாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ஸ்ரேயா.


Click it and Unblock the Notifications











