திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்ட விஜய் பட நடிகை.. இரண்டாவது குழந்தைக்கு தாயானார்!
சென்னை: நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை இலியான, திருமணத்துக்கு முன்பே முதல் குழந்தையை பெற்றுக்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் இலியானா. அப்படத்துக்கு பின் தெலுங்கு பக்கம் சென்ற இலியானாவுக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. இதனால் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என பெயர் எடுத்து பிரபாஸ், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆருடன் ஜோடி போட்டு நடித்தார் இலியானா. இதையடுத்து ஷங்கர் இயக்கிய நண்பன் படம் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

நடிகை இலியானா: நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, அந்த படத்தில் அவருடன் சேர்ந்து கொண்டு இருக்கானா இடுப்பிருக்கானா...இல்லையானா இலியானா... பாடலில் வளைத்து வளைத்து ஆட்டம் போட்டு இருந்தார். அந்த பாடல் மூலம் தமிழ் இளசுகளுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் இலியானா. அப்படத்தின் வெற்றிக்கு கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் பின் பாலிவுட்டில் பிசியானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் லிவ்விங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
திருமணமாகாமலே குழந்தை: இதையடுத்து, சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த இலியானா, உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால், இவரின் ரசிகர்கள் இலியானாவை நினைத்து வருத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு, கர்ப்பமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். திருமணமாகமலே இலியானா கர்ப்பமாக என்றும், திருமணமாகி விட்டதா என்றும், குழந்தையின் அப்பா யார் என்றும் பலரும் அவரை கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு எல்லாம் எந்த பதிலையும் சொல்லாத இலியானாவிற்கு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பின்னரே தன்னுடைய காதல் கணவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் இலியானா. கணவரின் பெயர் மைக்கெல் டோலன் என்றும் மகனின் பெயர் Koa Phoenix Dolan என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாவது குழந்தை: இந்நிலையில் நடிகை இலியானா இரண்டாவதாக ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். அந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், குழந்தைக்கு Keanu Rafe Dolan என பெயர் வைத்து இருப்பதாகவும் கடந்த 19ந் தேதி குழந்தை பிறந்தது என குழந்தையில் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் பல ஆண்டுகளாக வராமல் இருந்த நடிகை இலியானா கடந்த ஆண்டு "Do Aur Do Pyaar" என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில்,வித்யா பாலன், பிரதீக் காந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பின் இலியானா நடித்த எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.


Click it and Unblock the Notifications











