துடைத்து வைத்த குத்துவிளக்கு.. விஜய் பட நடிகை மீனாட்சி சௌத்திரி போட்டோஸ்!

சென்னை: GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மீனாட்சி சௌத்ரி சிவப்பு புடவையில் தகதகவென மின்னும் அழகுடன் இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்

மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹரியானாவில் பிறந்தார். இவர் மறைந்த கர்னல் பி.ஆர். சவுத்ரியின் மகள் ஆவார். பல் மருத்துவரான இவர், மாநில அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையும் ஆவார். இவர், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஃபெமினா மிஸ் இந்தியா' மற்றும் 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்' ஆகிய இரு போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார்.

meenakshi chaudhary photos
Photo Credit:

நடிகை மீனாட்சி சௌத்ரி: அதன் பின் சினிமாவிற்குள் நுழைந்த இவர், 2019ஆம் ஆண்டு வெளியான 'அவுட் ஆஃப் லவ்' என்ற இந்தி வலைத்தொடர் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். பின் 'இச்சட்டா வாகனம் நிலுபராது', 'கிலாடி', மற்றும் 'ஹிட்: தி செகண்ட் கேஸ்' போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழில் விஜய் ஆண்டனி நடித்த திரில்லர் படமான கொலை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பின் ஆர்.ஜே.பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்தார்.

பிரபலமான நடிகை: இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோட்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்த நிலையில், மீனாட்சி சௌத்ரி மகனுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி என்கிற ரோலில் நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் ஒப்புக்கு ஒரு பாடலுக்கும், ஒரு சில காட்சியில் மட்டுமே வந்து ஆட்டம் போட்டு இருந்தார் மீனாட்சி சௌத்ரி. அந்த படத்தை தொடர்ந்து துல்கல் சல்மானுடன் இணைந்து நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

meenakshi chaudhary photos
Photo Credit:

சேலையில் சூப்பர் போஸ்: சினிமாவில் தவிர்க்க முடியாது நடிகையாக மாறி இருக்கும் மீனாட்சி சௌத்ரி, Anaganaga Oka Raju என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது. இந்நிலையில் நடிகை மீனாட்சி சௌந்திரி சிவப்பு புடவையில் துடைத்து வைத்த குத்துவிளக்கு போல மின்னும் வகையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X