டிவிட்டரில் இணைந்த விஜய் பட ஹீரோயின்.. வந்த கையோட செய்த வேலைய பாருங்க!
சென்னை: விஜயின் ஷாஜகான் படத்தில் நடித்த நடிகை ரிச்சா பலோட் டிவிட்டரில் இணைந்துள்ளார்.
Recommended Video
நடிகை ரிச்சா பலோட் பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஆவார். இந்தியில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாகவும் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துள்ளார்.
இந்தி மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடி
தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான விஜயின் ஷாஜகான் படத்தில் நடித்தார் ரிச்சா பலோட். அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

வெப் சீரிஸ்கள்
கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான யாகாவராயினும் நா காக்க படத்தில் நடித்தார். அதன் பிறகு பெரிதாக படங்களில் தலைக்காட்டவில்லை ரிச்சா பலோட். மாறாக தொலைக்காட்சி தொடர்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

டிவிட்டரில் என்ட்ரி
இந்நிலையில் தான் டிவிட்டரில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை ரிச்சா பலோட். சேலையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் ரிச்சா பலோட் ஹாய் ஆல், நான் இப்போது டிவிட்டரில் என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து ஷாஜகான் படத்தில் இடம் பெற்ற மெல்லினமே பாடல் க்ளிப்பிங்கை ஷேர் செய்திருக்கிறார்.
விஜய்யுடன் போட்டோக்கள்
த்ரோபேக், ஷாஜகான் என்ற ஹேஷ்டேக்குடன் ஒன்றாக இணைத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் ஒன்றாக இருக்கும் சில போட்டோக்களையும் த்ரோபேக் என ஷேர் செய்துள்ளார். ரிச்சா பலோட் ஷாஜகான் படத்தில் மகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

காதலர்களுக்கு ஆதரவு
காதலர்களை சேர்த்து வைக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய், ரிச்சா பலோட்டை ஒரு தலையாக காதலிப்பார். கடைசியில் நண்பருடைய காதலி என்ற தெரிந்த பின் அவருடைய காதலை சேர்த்து வைப்பார் விஜய்.இந்தப் படத்தை ரவி அப்புலு இயக்கியிருந்தார்.


Click it and Unblock the Notifications











