ஸ்வர்ணமால்யாவை நியாபகம் இருக்கா?.. விஜய்யை நம்பினால் ஏமாற்றமாம்.. பட்டு பட்டுனு பேசிட்டாங்க

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி தனித்து களமிறங்குகிறார். அவர் மொத்தம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டுமென்பதற்காக தான் வந்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இளைஞர்களில் ஒருதரப்பினரும் அந்த மாற்றத்தை முன்வைத்து அவர் பின்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகை ஸ்வர்ணமால்யா விஜய் குறித்து பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. பல விஜய் ரசிகர்கள் அதற்கு ரியாக்ட்டும் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஏப்ரல் 14ஆம் தேதி. தமிழ் புத்தாண்டு மட்டுமில்லை அம்பேத்கரின் பிறந்தநாளும்தான். என்ன ஒரு அருமையான நாள். இன்று காலையிலேயே சில இளம் ஆய்வு மாணவர்களுடன் சேர்ந்து எனது வீட்டுக்கு அருகே இருக்கும் முதல்வர் படைப்பகத்துக்கு சென்றிருந்தேன். அதை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. அமைதியான சூழல் அங்கே நிலவுகிறது. முதல்வர் படைப்பகத்தில் படிக்கலாம், படைக்கலாம், கலந்தாலோசனை செய்யலாம். இதையெல்லாம் பார்த்துவிட்டு சுதந்திரம் என்றால் என்னவென்ற கேள்வி எனக்குள் வந்தது.

Vijay Political Entry Sparks Debate Actress Swarnamalya Reacts Video Goes Viral
Photo Credit:

அதுதான் சுதந்திரம்: நமக்கான தளத்தை கொடுப்பதுதான் சுதந்திரம். அந்த களமானது எந்தவிதமான திணிப்போ, கட்டாயமோ என்று எதுவுமில்லாமல் பயமும் இல்லாமல் நமது உரிமைகளை நிலைநாட்டுவது ஆகும். அதனை தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளாக நமக்கு கொடுத்திருக்கிறது. எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை. இந்தியாவில் மற்ற இடங்களை பார்க்கும்போது எவ்வளவு ஒரு அழுத்தமான சூழலில் அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. தமிழ்நாட்டின் தொன்மையை நினைத்து நமக்கு பெருமையாக இருக்கிறது.

மறுக்கப்படக்கூடாது: மரபு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். மறுக்கப்படக்கூடாது. இன்னும் ஒன்பது நாட்களில் தமிழ்நாட்டின் வரலாற்றினை மீண்டும் எழுதுவதற்கான நேரம் வந்திருக்கிறது. இந்நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் மாற்றம் தேவையா என்றால்; அது இல்லை. மாற்றத்தை தேடி போனால் ஏமாற்றம் வந்துவிடும். நமக்கு இருக்கும் முன்னேற்றத்தை பார்க்கையில் மாற்றம் தேவையில்லை. முன்னேற்றம்தான் தேவை. சமூக நீதியை பின்பற்றக்கூடிய தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்" என்றிருக்கிறர்.

விஜய்க்கு அட்டாக்: முன்னதாக, அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் தமிழ்நாட்டில் எதுவும் சரியில்லை. எனவே மாற்றத்துக்காகத்தான் அரசியலுக்கு வநதிருக்கிறேன் என்பதை முழக்கமாக வைக்கிறார். அதை பின்பற்றிதான் ஏராளமான ரசிகர்களும் அவர் பின்னால் செல்கிறார்கள். ஆனால் ஸ்வர்ணமால்யாவோ, மாற்றமே தேவையில்லை என்று கூறி விஜய்யை அட்டாக் செய்திருக்கிறார். இதனைப் பார்த்து தளபதி ரசிகர்களும் கொஞ்சம் ரியாக்ட் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

வெல்வாரா விஜய்?: சங்கீதாவுடனான விவாகரத்து விஷயம் தெரிந்ததிலிருந்து விஜய்க்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அவரது கட்சி தொண்டர்கள் மக்களிடம் சென்று மாற்றத்துக்காக விஜய் வந்திருக்கிறார் என்று சொன்னால்; அவர் அவருடைய மனைவி, பிள்ளைகளையே மதிக்கவில்லை. முதலில் அவரை மாற சொல்லுங்கள்; பிறகு மாற்றத்தை கொண்டு வரலாம் என கூறுவது வாடிக்கையாகிவருவது குறிப்பிடத்தக்கது. அதுதொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X