யப்பா.. உள்ளாடையுடன் விஜய்யின் ரீல் மகள்.. கோலிவுட் கிம் கர்தாஷியன் என கமெண்ட் அடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் விஜய்யின் மகளாக ஜீவிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அபியுக்தா மணிகண்டன். ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகளான அபியுக்தா கோட் படத்தில் நடித்து அசத்திய நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
டூபீஸ் உடைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக அணிந்துக் கொண்டு அபியுக்தா ஏகப்பட்ட போட்டோஷூட்களையும் ரீல்ஸ் வீடீயோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஏகப்பட்ட இளம் ரசிகர்களை கவர்ந்து வரும் அபியுக்தா அடுத்தடுத்து கோலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கோட் படத்தின் கிளைமேக்ஸில் தல அஜித்தை பிடிக்கும் என சொல்லி ஜீவன் க்ளோனை அபியுக்தா தள்ளி விட்டு நகர காந்தி விஜய் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாம் தியேட்டரில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த ஆண்டின் அதிக வசூல் படம்: கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்கள் அதிக வசூலை ஈட்டின. இந்த ஆண்டு ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை விட அதிக வசூலை ஈட்டி இதுவரை முன்னிலையில் இருக்கும் விஜய்யின் கோட் படத்தில் அபியுக்தா மணிகண்டனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்துள்ளார்.
ஏகப்பட்ட ட்ரோல்கள்: தோழி மீனாட்சி சவுத்ரி செத்துட்டா அதை பற்றி ஃபீல் கூட பண்ணாமல் ஐபிஎல் பார்க்க வந்துருக்கியேம்மா என நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு விஜய்யின் ரீல் மகளாக நடித்த அபியுக்தா மணிகண்டனை பங்கமாக கலாய்த்துத் தள்ளினர்.

உள்ளாடையுடன் ஓவர் கவர்ச்சி: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபியுக்தா மணிகண்டன் உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம கோட் பட ஜீவிதாவா இது? என வாயை பிளக்க ஆரம்பித்து விட்டனர். மாடலிங்கில் அதிக ஆர்வம் காட்டி வரும் அபியுக்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி தேசமாக மாற்றி வருகிறார்.
கோலிவுட் கிம் கர்தாஷியன்: 300 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை உலகளவில் கொண்டுள்ள சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் போலவே அபியுக்தா மணிகண்டன் இருக்கிறார் என்றும் கோலிவுட்டின் கிம் கர்தாஷியன் இவர் என இளைஞர்கள் கமெண்ட் போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











