TVK பத்தி பேசுனா.. கெட்டவார்த்தையில் கமெண்ட் போடுவியா?.. விளாசிய நடிகை!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி பேசினால் கமெண்ட் பாக்ஸில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவீர்களா என சீரியல் நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருவருகிறது.

இன்ஸ்டாகிராமில் பலரை ஊக்கப்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சசிலயா. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர், மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் படுமோசமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வரும் சசிலயா, சின்னத்திரையில் மீனாட்சி பொண்ணுங்க, இதயம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

Vijay TVK Party actress
Photo Credit:

நடிகை சசிலயா: அண்மையில் சசிலயா youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், டிவிகே கட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வைரலான நிலையில் பலரும் கமெண்ட் பாக்ஸில் சசிலயாவை மோசமான வார்த்தையால் திட்டி வருகின்றனர். இதற்கு சசிலயா இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில், எனக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பிடிக்கும். இதில், யாருக்கு என்ன பிரச்சனை, நான் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டியில், எனக்கு 'டிவிகே' பிடிக்கும் என சொல்லியிருந்தேன். அந்த பேட்டி இணையத்தில் வைரலான பிறகு, அந்த வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் உங்களை போய் நான் அறிவாளி என நினைத்தேன், உங்களை நான் ஃபாலோ செய்ததற்கு அசிங்கப்படுகிறேன் என மோசமான வார்த்தைகளால் என்னை திட்டி வருகிறார்கள்.

என்கிட்ட வெச்சிக்காதே: டிவிகே கட்சியை எனக்கு பிடிக்கும் என சொன்னது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இதில், உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களுக்கு இஷ்டம் இருந்தால் என்னை ஃபாலோ பண்ணுங்க, இல்லை என்றால் அன்ஃபாலோ செய்து விட்டுபோங்க, அதை விட்டுவிட்டு கமெண்ட் பாக்ஸில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, தற்குறி என பதிவிடுவது இதையெல்லாம் என்கிட்ட வெச்சிக்கக்கூடாது. வேறு எங்காவது வெச்சிக்கோங்க என மோசமாக விமர்சித்தவர்களை திட்டியிருக்கிறார் சசிலயா. அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் சரியான பதிலடி என அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X