»   »  'றெக்க'... விஜய்சேதுபதியுடன் முதல் முறை இணையும் லட்சுமி மேனன்!

'றெக்க'... விஜய்சேதுபதியுடன் முதல் முறை இணையும் லட்சுமி மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்கள் தந்த விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

ஆரஞ்சு மிட்டாய் படத்துக்குப் பிறகு பி கணேஷ் தயாரிக்கும் படம் இது. அதாவது விஜய் சேதுபதியின் சொந்தப் படம்.


Vijay Sethupathy - Lakshmi Menon in Rekka

'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தினசிவா இந்தப் படத்தை இயக்குகிறார்.


இப்படத்துக்கான போடோஷூட் சமீபத்தில் ஏ.வி.ம் ஸ்டுடியோவில் பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராமனால் எடுக்கப்பட்டது.


Vijay Sethupathy - Lakshmi Menon in Rekka


இந்தப் படத்தில் முதல் முறையாக, ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் விஜய் சேதுபதி.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு முழுநீள கமர்சியல் திரைப்படமாக வரபோகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது.

English summary
Lakshmi Menon is going to be paired with Vijay Sethupathy for the first time in Rekka movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil