twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்... மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பிய விஜயசாந்தி

    |

    சென்னை: ஆடின காலும் பாடின வாயும் நிற்காது என்பார்கள். சினிமா நடிகர் நடிகையர்களுக்கு அது பொருத்தமான பழமொழி. அரசியலில் இருந்து சினிமாவிற்கு சிரஞ்சீவி திரும்பியது போல இப்போது நடிகை விஜயசாந்தி 13ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறார். மகேஷ்பாபு படத்திலும் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்திலும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகை விஜயசாந்தி 1980ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

    1985ஆம் ஆண்டு விஜயசாந்தி தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற பிரதிகடனா என்ற படம் தமிழில் பூ ஒன்று புயலானது என்று டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படம் தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது. இதனையடுத்து தமிழ் திரையுலகில் இவருக்கென்று மிகப் பெரிய மார்கெட் ஏற்பட்டது.

    புயலான விஜயசாந்தி

    புயலான விஜயசாந்தி

    பூ ஒன்று புயலானது படத்தைப் போல், கர்தவ்யம் படமும் தெலுங்கில் இருந்து தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படமும் தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தது.

    லேடி சூப்பர் ஸ்டார்

    லேடி சூப்பர் ஸ்டார்

    நடிகை விஜயசாந்தி 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் தென்னிந்திய சினிமாவின் லேடி அமிதாப் என்று அழைக்கப்பட்டார்.

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    அதற்கு பிறகு சிறந்த நடிகைக்கான நான்கு மாநில நந்தி விருதுகள் பெற்றார். 1985 ஆம் ஆண்டு, நடிகை விஜயசாந்தி தெலுங்கு திரைப்படமான பிரதிதடனா படத்திற்கு மாநில நந்தி விருதை பெற்றார். நடிகை விஜயசாந்தி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தனித்து நின்றார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    நடிகை விஜயசாந்தி சிறந்த காவலராக நடித்த கர்தவ்யம் திரைப்படத்திற்கு 1990ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இவருக்கு 2003ஆம் ஆண்டு Filmfare Awards South இருந்து, ஆறு விருதுகள் சிறந்த நடிகைக்காகவும் ஒரு விருது Filmfare Lifetime Achievement Award South மொத்தம் ஏழு விருதுகள் பெற்றார்.

    ரூ. 1 கோடி சம்பளம்

    ரூ. 1 கோடி சம்பளம்

    1990களில் தன்னுடன் நடித்த ஆண் நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான். அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான கர்தவ்யம் திரைப்படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்றார். அந்த காலகட்டத்தில் ஒரு பெண் நடிகருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகையாகும்.

    தீவிர அரசியல்

    தீவிர அரசியல்

    அவர் 1998ஆம் ஆண்டில் மாநில அரசியலில் சேர்ந்தார். பாஜகவில் இணைந்த அவர் பிரச்சாரத்திற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
    விஜயசாந்தி கடந்த 2006ஆம் ஆண்டு நாயுடம்மா படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் நுழைந்தார். 2009ஆம் ஆண்டு தெலுங்கானா உருவாக தனி கட்சி தொடங்கினார். தெலுங்கானா மாநில போராட்டத்திற்காக டிஆர்எஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்து போராடினார். தனி தெலுங்கானா உருவாக விஜயசாந்தியும் முக்கிய காரணம். டிஆர்எஸ் கட்சியில் இருந்து எம்பியாக தேர்வான அவர் 2014ஆம் ஆண்டுவரை எம்பியாக இருந்தார். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஆனால் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

    ரூ. 5 கோடி சம்பளம்

    13ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்பியுள்ளார். இவர் முதன் முதலில் நடிகர் கிருஷ்ணாவுடன் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார், தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கிருஷ்ணாவுடைய மகன் மகேஷ் பாபு நடிக்கும் சரிலேறு நீகேவ்வறு திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தி மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக இவருக்கு ரூ.5 கோடி சம்பளம் எனக் கூறப்படுகிறது. இது முன்னணி கதாநாயகிகள் பெறும் சம்பளத்தைவிட அதிகம் என்றும் கூறப்படுகிறது.

    எஸ்எஸ் ராஜமவுலி

    எஸ்எஸ் ராஜமவுலி

    சரிலேறு நீகேவ்வறு படத்திற்கு அடுத்ததாக, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட் நடிக்கும் திரைப்படம் RRR இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை விஜயசாந்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் கசந்து போனதால் சினிமாவிற்கு திரும்பினார் சிரஞ்சீவி. அதேபாணியில் இப்போது விஜயசாந்தியும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

    English summary
    Vijayasanthi, who is busy in politics, will be back in films after 13 years. She is going to act with Telugu Actor Makesh Babu in Sarileru Neekevvaru film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X