விஜய் டிவி ஜாக்குலினை நியாபகம் இருக்கா.. ஸ்லிம்மாக க்யூட்டா எப்படி இருக்காங்கனு பாருங்க!
சென்னை: விஜய் டிவி ஜாக்குலின் க்யூட்டான போட்டோவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போது யாரு என்ற பிரபலமான காமெடி நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

விஜய் டிவி ஜாக்குலின்: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஜொலித்த ஜாக்குலின், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகில படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த மிகப்பெரிய வெற்றியை பெற்ற போதும், ஜாக்குலினுக்கு படவாய்ப்பு வராததால், விஜய் தொலைக்காட்சியில் தேன்மொழி B.A ஆண்டாள் அழகர் என்ற தொடரில் நடித்திருந்தார்.
மனதில் இடம் பிடித்தார்: பல ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த சீரியலில் ஜாக்குலின் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த நாடகத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இந்த தொடர் முடிந்த பிறகு, வேறு சீரியலில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனார்.

விதவிதமான போஸ்: ஆனால், ஜாக்குலின் நடிப்பதை நிறுத்தி விட்டு, எந்த நிகழ்ச்சிலும் அவர் தலைக்காட்டவில்லை. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், தனது அன்பான ரசிகர்களுக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் தரிசனம் கொடுத்து வரும் ஜாக்குலின் இப்போது விதவிதமாக அமர்ந்து கொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது. ஜாக்குலினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஓங்கி அடிக்கலாம்: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த ஜாக்குலின்,ஆங்கராக இருக்கும் போது நிகழ்ச்சிக்கு வரும் சில பிரபலங்கள், தோள் மீது கை போடுவார்கள், தொட்டு தொட்டு பேசுவார்கள். அவர்கள் தங்களை பெரிய ஸ்டாராக நினைத்துக் கொண்டு படுமோசமாக நடந்து கொள்வார்கள், அவர்களை ஓங்கி அடிக்கலாம் என்று தோன்றும் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications











