திரிஷா பெயர் இப்படி அடி வாங்குதே?.. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.. எடப்பாடி பரப்புரையில் என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததும் போதும் தமிழ்நாட்டில் பல ஹெட்லைன்ஸ்கள் உருவாகின்றன. முதலில் அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்தார். அந்த விவாகரத்து விஷயத்தில் திரிஷாவின் பெயரும் அடிபடுகிறது. அதற்கு காரணமும் அவர்தான். விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடியாக வந்தார் அம்மணி. அப்போதிருந்து இந்த விஷயத்தில் அவரும் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டார். சிலரோ எல்லை மீறி அவரை பற்றி பேசுவதும் நடக்கிறது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் சங்கீதா பெரிய குண்டை தூக்கி போட்டார். அவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒரு நடிகையையும் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகையின் பெயர் திரிஷாதான் என்று பலரும் அடித்து சொன்னார்கள். அப்போதும் ஒருதரப்பினர் விஜய், திரிஷா மீது நம்பிக்கை வைத்து அப்படியெல்லாம் இருக்காது என்றே கூறினார்கள். ஆனால் இவர்களோ மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்து நின்றார்கள்.

ஏகப்பட்ட தகவல்கள்: அப்போதிருந்து ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. விஜய்யும், திரிஷாவும் காதலிக்கிறார்கள். கூடிய விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் கதை கட்டிவிட்டார்கள். போதாக்குறைக்கு அவரது அம்மா உமாவும், அந்த ரீல்ஸ்களுக்கு எல்லாம் லைக்கை வேறு போட்டு வைத்திருந்தார். அதேபோல் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு விஜய் சென்றார். அப்போது அவர் செல்வதற்கு முன்பாகவே விமானம் மூலம் மும்பை சென்றார் திரிஷா. ஆனால், அவர் டெல்லிக்குதான் செல்கிறார் என்று கதை கட்டிவிட்டார்கள்.
அமைதி காக்கும் திரிஷா: அதுமட்டுமின்றி அப்போது செய்தியாளர்களும் இதுகுறித்து ஏகப்பட்ட கேள்விகளை கேட்டார்கள். அதற்கும் பதிலளிக்காமல் மௌனமாகவே சென்றார். அதேசமயம் சில நேரங்களில் கொஞ்சம் சோகமாகவும் அவர் போடும் இன்ஸ்டா போஸ்ட்டுகள் பல கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க விஜய்யுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவதால்; தேர்தல் பரப்புரை களத்திலும் அவரது பெயர் அடிபட தொடங்கிவிட்டது. அதனை எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்.
என்ன பேசினார்?: இன்று அவர் கோபி செட்டிபாளையத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தனது நீண்ட கால தோஸ்த்தான செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டதால் அவரைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். பரப்புரையில் பேசிய அவர், "அங்கே போய் ஒரு துண்டை அணிவிக்கிறாங்க. இவரும் கேவலம் அந்த துண்டை வாங்குகிறார். இப்போது யார் புகைப்படத்தை வைத்திருக்கிறார்" என்று கேட்டபோது; கூட்டத்தில் இருந்த ஒருவர், 'திரிஷா ஃபோட்டோ' என்று கமெண்ட் அடித்தார்.
எடப்பாடியின் ரியாக்ஷன்: அதற்கு பழனிசாமியோ, "சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்திருக்கிறார். அதில் எல்லாம் அவர் கைதேர்ந்தவர். நீயெல்லாம் என்னை பற்றி கேவலமாக பேசுகிறாய்" என்றார். இதனைப் பார்த்த திரிஷா ரசிகர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். உங்கள் பிரச்னையில் எதற்காக திரிஷாவை இழுக்க வேண்டும். இதற்கெல்லாம் உடனடியாக மேடம் முடிவு கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முன்னதாக, அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம்கூட நடிகை நயன்தாரா பற்றி கொச்சையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
