விஜய்க்கும், திரிஷாவுக்கும் அடுத்த மாதம் திருமணமா?.. கல்யாண வேலைகள் மும்முரம்.. இப்படி ஒரு குண்டா?
சென்னை: விஜய்யும், திரிஷாவும் இத்தனை வருடங்களில் இல்லாத பழக்கமாக; மேட்சிங்காக உடையை அணிந்துகொண்டு ஒரு திருமணத்துக்கு வந்தார்கள். சங்கீதா விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே இப்படி ஒரு செயல் நடந்ததால் தவெக தொண்டர்களே உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தார்கள். அதற்கு பிறகு இரண்டு பேரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாலும்; இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்ற பேச்சுக்களும் கிளம்பியிருக்கின்றன.
விஜய்யும், திரிஷாவும் 20 வருடங்களுக்கும் மேலாக பழக்கமுடையவர்கள். கில்லியில் முதல்முறையாக ஒன்றாக நடிக்க ஆரம்பித்த அவர்கள் அதனையடுத்து திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ படங்களில் நடித்தார்கள். கோட் படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடனம் ஆடினார்கள். அந்தப் பாடலிலேயே திரிஷா அணிந்திருந்த சேலையின் நிறம் தவெக கொடி நிறத்தில் இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை; எதார்த்தமாக அமைந்த ட்ரெஸ் கலர்தான் அது என்று படக்குழுவினர் சொன்னார்கள்.

யார் அந்த நடிகை?: சூழல் இப்படி இருக்க திடீரென சில மாதங்களுக்கு முன்பு விஜய் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரிடமிருந்து விவாகரத்து கேட்டிருந்தார் மனைவி சங்கீதா. அவர் மனுவில் நடிகை பற்றி குறிப்பிட்டிருந்த விஷயங்கள் எல்லாம் திரிஷா செய்த செயல்களுக்கு ஒத்துப்போனது. அவர்தான் லியோ பட ஷூட்டிங் சமயத்திலும், விஜய்யின் பிறந்தநாள் அன்றும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். எனவே சங்கீதா சொல்லும் நடிகை திரிஷாதான் என்று பலரும் சந்தேகித்தார்கள்.
முதல்முதலாய் ஒரு செயல்: நிலைமை இப்படி இருக்க விஜய்யும், திரிஷாவும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஏஜிஎஸ் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். இத்தனை வருடங்களாக பழகியிருந்தாலும் பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் இப்படி ஒரு செயலை இரண்டு பேருமே செய்தது இல்லை. ஆனால் சங்கீதா குண்டை தூக்கி போட்ட சில நாட்களிலேயே இப்படி செய்திருந்தார்கள். இந்த நிலைமையில் இவ்வாறாக செய்தால் தேவையில்லாத பேச்சுக்கள் கிளம்பும் என்று தெரிந்திருந்தாலும்; இப்படி செய்ததால்; கண்டிப்பாக இரண்டு பேருக்குமிடையே ஏதோ ஒரு உறவு நட்பை தாண்டி இருப்பதாகவும் சிலர் முணுமுணுத்தார்கள்.
விரைவில் திருமணமா?: அப்படி திருமணத்துக்கு வந்து சென்ற பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். ஆனால் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் சொல்லி சில ரீல்ஸ்கள் கண்ணில் படுகின்றன. அவற்றுக்கு திரிஷாவின் தாய் உமாவும் லைக் செய்திருந்தார். இதெல்லாம் எதேச்சையாக நடந்ததா இல்லை திட்டமிட்டு நடந்ததா என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்நிலையில் தவெகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மணிகண்டன் புது குண்டை ஒரு பேட்டியின்போது தூக்கி போட்டிருக்கிறார்.
மணிகண்டன் பேட்டி: அவர் இந்தியா தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யை பற்றி என்ன சொன்னாலும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் காதுகளில் விழாது. அவர் மே நான்காம் தேதி வரையில் வெயிட் செய்து பார்ப்பார். 20ஆம் தேதி விவாகரத்து வரவிருக்கிறது. தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு திரிஷாவை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்கு ஹனிமூன் போய்விடுவார். இவர்கள்தான் பாவம். திருமண வேலைகள் எல்லாம் மும்முரமாக தொடங்கிவிட்டன. அதனால்தான் இடை இடையே பரப்புரைக்கு லீவு போடுகிறார் விஜய்" என்றார். அவரது இந்தப் பேட்டி அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















