விஜய்யுடன் திருமணம் உறுதி செய்யப்பட்டதா?.. திரிஷா அம்மா உமா கிருஷ்ணன் தந்த ரியாக்ஷன்.. அட செம ட்விஸ்ட்
சென்னை: சங்கீதா நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டதோடு மட்டுமில்லாமல்; தனது கணவருக்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்றும் கூறிவிட்டார். அதனையடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டார்கள். அந்தச் சூழலில் தயாரிப்பாளர் வீட்டு திருமணத்துக்கு திரிஷாவுடன் மேட்சிங்காக ஆடை அணிந்துகொண்டு ஜோடியாக சென்றார் விஜய். அப்போதிருந்து இரண்டு பேர் பற்றியும்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.
விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து வேண்டி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். அரசியல் களம் தகிக்கும் இந்த நேரத்தில் அவரது அந்த மனு விஜய்க்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தெரிந்துவிடும். ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை இந்த விஷயத்துக்கு மத்தியில் எதிர்கொள்கிறது தவெக. விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டதைவிடவும்; விஜய்யின் மற்றொரு செயல்தான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன செய்தார்?: அதாவது சில நாட்களுக்கு முன்பு ஏஜிஎஸ் வீட்டு திருமணம் நடைபெற்றது. அதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக வந்திறங்கினார் விஜய். ரவி மோகன் - கெனிஷா போன்றே மேட்சிங்காக உடைகளை அணிந்து வந்திருந்தார்கள். அதை பார்த்து திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் யாரெல்லாம் பார்த்தார்களோ அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். தவெக தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்கள்.
நிதானத்தில் விர்ச்சுவல் வாரியர்ஸ்: இருந்தாலும் இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள். இதற்கெல்லாம் எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓபனாக அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் எழுந்தன. மற்றவர்களும் இது அவர்களது பெர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக்கொண்டார்கள். பார்த்திபன் பேசியதற்கு மட்டும் நடிகை திரிஷா கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். அதற்கு இவரும் சில வீடியோக்களை இறக்கியிருந்தார். ஒருவழியாக அந்தப் பிரச்னை முடிந்தது.
திருமண ஆசையில் திரிஷா?: இப்படி தொடர்ந்து ஏதோ ஒன்று இந்த விஷயத்தில் நடந்தாலும் திரிஷா சில்லாகத்தான் இருக்கிறார். நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சூழ்ந்தாலும் கேஷுவலாக கடந்து சென்றார். பொன்னியின் செல்வன் ஆடை வடிவமைப்பாளர் திருமணத்துக்கு சென்று ஃபோட்டோக்களாக போடுகிறார். சில புகைப்படங்களுக்கு பின்னணியில் அவர் ஒலிக்க விட்டிருக்கும் பாடல்களும் கவனம் பெறுகின்றன. ஒருவேளை திரிஷாவுக்கு திருமண ஆசை வந்துவிட்டதோ; ஒரே காதல் பாட்டாக இருக்கிறதே என கமெண்ட்ஸ்களும் வந்தன.
திரிஷா அம்மா ரியாக்ஷன்: இது ஒருபக்கம் இருக்க சோஷியல் மீடியாக்களில் சிலர்; விஜய்யும், திரிஷாவும் திருமணம் செய்துகொண்டால் என்ன? என கேள்வி எழுப்புவதோடு மட்டுமில்லாமல் சில ரீல்ஸ்களையும் உருவாக்கி வருகிறார்கள். அந்தவகையில் ரசிகர் ஒருவர், 'விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக இறங்கும் வீடியோவை பகிர்ந்து அதில், தாலி கட்டுவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் போஸ்ட்டுக்கு திரிஷாவின் அம்மாவான உமா கிருஷ்ணன் லைக் போட்டிருக்கிறார் என ஒரு புகைப்படம் சுத்தலில் வருகிறது. அதை பார்த்த பலரும், ஓஹோ இரண்டு பேருக்கும் திருமணம் என ஹிண்ட் கொடுக்கிறாரோ என கேள்வி எழுப்புகிறார்கள். அதுமட்டுமின்றி, கண்டிப்பாக தெரிந்து லைக் போட்டிருக்கமாட்டார்; தவறுதலாக இது நிகழ்ந்திருக்கும்.. லைக் செய்தவர்கள் பட்டியலில் அவர் பெயரையே காணவில்லையே எனவும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். தற்போது இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















