திரிஷாவின் அம்மா சும்மாவே இருக்கமாட்டாங்களா?.. விஜய் பிரச்னையில் செய்த அடுத்த செய்கை.. என்ன பிளான்?

சென்னை: விஜய்யும், திரிஷாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்துகொண்டு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அதனையடுத்து அவர்களுக்குள் இருப்பது என்ன மாதிரியான உறவு என்பதை தீவிரமாக ரசிகர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். ஆனால் திரிஷா எதையும் வெளிப்படுத்தாமல் சைலெண்ட்டாகவே இருந்துவருகிறார். அதேசமயம் திரிஷாவின் அம்மா உமா செய்யும் சில செயல்கள் புது புது பேச்சுக்களை கிளப்பிவிட்டிருக்கின்றன.

விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா; திடீரென கடந்த மாத இறுதியில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது கணவருக்கு இருக்கும் திருமணத்தை மீறிய உறவு பற்றி புட்டு புட்டு வைத்திருந்தார். அதனையடுத்து யார் அந்த நடிகை என்று தேடுதலில் ரசிகர்கள் ஈடுபட்டார்கள். அந்த நேரம் பார்த்து ஒரு திருமணத்துக்கு விஜய்யுடன் திரிஷா மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்திருந்தார். ஜோடியாக மேடையில் நின்று போஸ் கொடுத்துவிட்டு; ஒரே காரில் ஏறியும் சென்றுவிட்டார்கள்.

Vijay Trisha Wedding Talk Again Uma Krishnan s Action Goes Viral
Photo Credit:

கொந்தளித்த ரசிகர்கள்: இரண்டு பேரும் அப்படி வந்ததையடுத்து அனைவருமே விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே இருக்கும் உறவு என்ன மாதிரியான உறவாக இருக்கும் என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமின்றி எந்த மாதிரியான உறவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்கென்று தேர்தல் நேரத்திலும், மனைவி விவாகரத்து கேட்டிருக்கும் சூழலிலும்; ஏற்கனவே சந்தேக வளையத்தில் இருக்கும் நடிகையுடன் அவர் எப்படி ஒன்றாக வரலாம் என்று கொந்தளிக்கவும் செய்தார்கள்.

டெல்லி சென்ற திரிஷா?: அவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது தமிழ்நாட்டில் ஹெட்லைன்ஸாக மாறியது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார் விஜய். அவர் கிளம்புவதற்கு முன்பாகவே திரிஷாவும் விமான நிலையத்துக்கு வந்து மும்பைக்கு சென்றார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு சென்றதாகவும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இப்படி தொடர்ந்து விஜய் வாழ்க்கையில் சமீப காலமாக திரிஷாவின் பெயர் அடிக்கடி அடிபடுகிறது.

தேர்தலில் பிரச்னை?: தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இந்த நேரத்தில் தளபதி இப்படி செய்திருப்பதால் கண்டிப்பாக தேர்தலில் ஏதாவது பின்னடைவை சந்திப்போமா என்று உள்ளுக்குள் பயந்துதான் இருக்கிறார்கள் தவெக. இருந்தாலும் விஜய்யை எப்படியாவது வெற்றி பெற வைத்திட வேண்டும்; தங்களை தற்குறிகள் என்று சொன்ன அத்தனை பேருக்கும் தரமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்கள் தவெகவினர். இது ஒருபக்கம் இருக்க திரிஷாவின் அம்மாவுடைய செயல்பாடுகளும் விவாதத்தை கிளப்பியிருக்கின்றன.

உமாவின் இரண்டாவது செய்கை: சில நாட்களுக்கு முன்பு விஜய், திரிஷாவுக்கு திருமணம் என்று கூறி ஒரு ரீல் வெளியானது. அதை உமா கிருஷ்ணன் லைக் செய்திருந்தார். அது பெரிய பேசுபொருளானது. இருக்கும் பிரச்னையில் இவர் வேறு இப்படி லைக் செய்கிறாரே என்று நொந்துகொண்ட பலரும்; இரண்டு பேருக்கும் திருமணம் என்பதை உறுதி செய்துவிட்டாரோ என்றும் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து வைத்து இன்னொரு வீடியோவும் வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் கொச்சையாகவே பேசியிருக்கிறார்கள். அதற்கும் உமா லைக்கிட்டிருப்பது அடுத்தக்கட்ட விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X