பெல்லி ஆர்ட்… கர்ப்பகாலத்துல இப்படி பண்ணலாமா… விமர்சனங்களில் சிக்கிய விஜய் டிவி நடிகை !
சென்னை : பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ஃபரீனா ஆசத், கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பகிர்ந்துள்ள வீடியோ கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
கர்ப்பகாலத்தில் இப்படி பண்ணலாமா ஃபரீனா,என்று பல ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பெண்களின் ஃபேரைட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சியில் சமையல் செய்து பல பெண்களின் ஃபேவரைட்டாக இருந்தார் பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video

வில்லி வெண்பா
அந்த தொடரில் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்வதற்கு முக்கியமான காரணம் வெண்பா தான். பல இல்லத்தரசிகள் வெண்பா கதாபாத்திரத்தை கழுவி கழுவி ஊற்றுவார்கள். அந்த வில்லி கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார் பரீனா.

மகிழ்ச்சி
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார். அதில் கர்ப்பமாக உள்ளேன். இன்னும் 3 மாதங்கள் உள்ளது. குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 4 வருட கனவு நனவாகி உள்ளது என்று பதிவிட்டு இருந்தார்.
திட்டிதீர்க்கும் ரசிகர்கள்
சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா, தினமும் பெரிய வயிறு தெரியும் படி விதவிதமாக போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயிற்றில் மருதாணி ஆர்ட்டை போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஃபரீனா இப்படி பண்றீங்க, உள்ளே பாப்பா இருக்கு இப்படி பண்ணலாமா என்றும், மருதாணி போடுற இடமா என்றும் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











