பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் டிடி... இயக்குநர் யார் தெரியுமா ?
சென்னை : விஜய் டிவி ஆஸ்தான தொகுப்பாளி டிடி முன்னணி இயக்குநரின் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நீண்ட காலமாக விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி. ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.
இவரின் படபடப்பான பேச்சு, கலகலப்பான சிரிப்பால் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் திவ்யதர்ஷினி.

விஜய் டிவி டிடி
விஜய் டிவி-யில் இருக்கும் ஆங்கர்களில் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி. அதோடு புதிதாக தொலைக்காட்சிக்கு வரும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார். சென்னையில் பிறந்த இவர் கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செகண்டரி ஸ்கூலில் பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார்.

சிறப்பு நேர்காணல்
விஜய் தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நெற்றிக்கண் வெளியீட்டின் போது நயன்தாராவுடன் ஒரு சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அடுத்த, ஆர்.ஆர்.ஆர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்,ராஜமௌலி என சூப்பரான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஜோஸ்வா இமைபோல் காக்க
திரைப்படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை திருப்பி உள்ள டிடி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.
Recommended Video

பிரபல நடிகருக்கு தங்கையாக
இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் டிடி கமிட்டாகி உள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாக உள்ள அந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இதில், டிடி ஜீவா மற்றும் ஜெய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











