சிவாங்கி காதலில் விழுந்தாரா? கன்னத்தோடு கன்னம் வச்சு ஓவர் நெருக்கம்.. ஓ கதை அப்படி போகுதா?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடகியாக தனது திறமையை நிரூபித்தவர் சிவாங்கி. இசை நிகழ்ச்சியில் கால் பதித்து, சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவராக இருக்கிறார் சிவாங்கி. அவரின் தனித்துவமான பாடும் திறமை மற்றும் நகைச்சுவையான தன்மை அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது. தற்போது சிவாங்கி தனது இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி பேசுபொருளாகி உள்ளது.
சிவாங்கிக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது விஜய் டிவி தான். சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்ட அவர், அதன் பின், 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அப்போது இவர் நடிகர் அஸ்வினுடன் செய்த சேட்டையை யாராலும் மறக்க முடியாது. குக் வித் கோமாளி சீசனில் மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி நான்காவது சீசனில் அதிரடியாக குக்காக வந்து நடுவர்கள் ஸ்தம்பித்து போகும் அளவிற்கு சமைத்து அசத்தினார்.

விஜய் டிவி சிவாங்கி: குக் வித் கோமாளியில் இவர் செய்த சேட்டையை பார்த்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்தார். இதையடுத்து, விஜய் டிவிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட 'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது சீசனில் சிவாங்கி தொகுப்பாளராக மாறி 'டாப் குக் டூப் குக்' சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
காதலில் விழுந்த சிவாங்கி: தற்போது சிவாங்கி நடிகர் முகேஷ்ரவியை கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்து லவ் எமோஜியை பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சிலர், புது ப்ராஜெக்டா என கேட்டு வருகின்றனர். அதே போல முகேஷ் ரவியும் தனது இன்ஸ்டாகிராம் அதே போட்டோவை ஷேர் செய்துள்ளார். நடிகர் முகேஷ்ரவி. 'கம்பி கட்ன கதை' என்கிற படத்தில் நடித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளதால், இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், சிவாங்கி எதையும் தெளிவாக குறிப்பிடாததால் இணையவாசிகள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications