Maya Krishnan: உனக்கொரு எல்லை கிடையாது.. அட மாயாவுக்குள்ள இப்படியொரு திறமையா?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தவர் மாயா கிருஷ்ணன். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயாவின் போல்டான செயல்பாடுகள் ஏராளமான ரசிகர்களின் பாராட்டுகளையும் மட்டும் இல்லாமல் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றது.
மாயா கிருஷ்ணனுக்காக தனியாக ஒரு கேங்கே செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் மாயா கிருஷ்ணன். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நடிகை மாயா கிருஷ்ணன்: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார் நடிகையும் மாடலுமான மாயா கிருஷ்ணன். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற மாயா கிருஷ்ணனுக்கு நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் கிடைத்தது. முன்னதாக ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி தமிழ் நடிகர்களுடன் விக்ரம், லியோ போன்ற படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்றிருந்தார் மாயா. விக்ரம் படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கிலும் நாயகியாக மாயா கமிட்டாகி நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்கள்: தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க பேச்சு வார்த்தைகளில் மாயா ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் மாயா கிருஷ்ணன் பங்கேற்ற நிலையில் பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். அந்த வகையில் மாயா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் மிகப் பெரிய அளவில் கவனத்தை பெற்றிருந்தார். மேடை நாடக பின்னணியில் இருந்து வந்த மாயா கிருஷ்ணன், கடந்த 2015ம் ஆண்டில் வெளியான வானவில் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: தொடர்ந்து தனுசுடன் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் மாயா கிருஷ்ணனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே மிகப் பெரிய கவனத்தை மற்றும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்தது. பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய போல்டான நடவடிக்கைகள் மூலம் ஏராளமான ரசிகர்களின் பாராட்டை பெற்றதுடன் விமர்சனங்களையும் தொடர்ந்து பெற்று வந்தார். இந்நிலையில் மாயா கிருஷ்ணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
வில்வித்தை பயிற்சி: அடுத்தடுத்த பல சுவாரஸ்யங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் மாயா கிருஷ்ணன். இவரை இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய டேலண்ட் ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராமில் மாயா கிருஷ்ணன் வெளிப்படுத்தியுள்ளார். வில்வித்தை பயிற்சியை தான் மேற்கொண்டதாகவும் அதில் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளதாகவும் இதற்கு தன்னுடைய சகோதரிகளே காரணம் என்றும் மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு தான் வில்வித்தை பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த மாயா: இந்த வீடியோவில் வில்லை சரியாக அதன் இலக்கை நோக்கி எய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் மாயா. மேலும் அதன் பயிற்சியாளரிடமும் மாயா சரியான அளவில் பயிற்சிக்கான அட்வைசையும் கேட்டதையும் பார்க்க முடிந்தது. நடிகையாகவும் மேடை நாடக கலைஞராகவும் அடுத்தடுத்த தளங்களில் பயணித்துவரும் மாயா கிருஷ்ணனின் இந்த புதிய டேலண்ட் குறித்து ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











