முதலில் பார்ட்டி.. பிறகுதான் டேட்டிங்.. தமன்னாவுடனான உறவு குறித்து விஜய் வர்மா ஓபன்
சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தமன்னா பற்றி அவரது காதலர் விஜய் வர்மா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது.

விலகிய சிம்பு?: குறிப்பாக கே.வி.ஆனந்த் இயக்கிய கோ என்ற படத்தில் சிம்புதான் முதலில் நடிக்க வேண்டி இருந்தது அந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்தால் மட்டும்தான் தான் நடிப்பேன் என அவர் கூறி படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் உலாவியது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தமன்னா மீதான கிரேஸ் இருந்தது. எனவே இன்னும் பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமன்னாவின் காதல்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இரண்டு பேரின் திருமணமும் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். கடைசியாக அவர் நடித்த அரண்மனை 4 படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது.
விஜய் வர்மா பேட்டி: இந்நிலையில் தமன்னாவுடனான உறவு குறித்து சமீபத்தில் விஜய் வர்மா அளித்த பேட்டி ஒன்றில், "எனது திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த விஷயங்களைவிடவும் எங்களின் டேட்டிங் குறித்து தெரிந்துகொள்ளத்தான் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது அது பழகிவிட்டது. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே அழகான, ஆழமான உறவு இருக்கிறது. அதை மனதார அனுபவிக்கிறோம்.
பார்ட்டி பின்னர்தான் டேட்டிங்: லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிக்கும்போது இரண்டு பேரும் டேட்டிங் செய்யவில்லை. முதலில் ஒரு பார்ட்டி வைத்துக்கொள்வோம் என்றுதான் பேசினோம். சொன்னபடியே பார்ட்டியையும் ஏற்பாடு செய்தோம். அந்தப் பார்ட்டியில் நான்கு பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். அதற்கு காரணம் நான் தமன்னாவுடன் அதிக நேரம் தனியாக செலவழிக்க விரும்பினேன். அந்தப் பார்ட்டிக்கு பிறகுதான் நாங்கள் டேட்டிங் செய்தோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











