ஷீரடி சாய் பாபா கோயிலில் விஜய்.. தனி விமானத்தில் சென்ற பெண்கள் யார்?.. வெளியான ஆதாரம்

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மே நான்காம் தேதியை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ரிசல்ட்டுக்கு முன்னதாக கோயில் கோயிலாக செல்ல தொடங்கியிருக்கும் அவர்; நேற்று திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு சத்ரு சம்ஹார பூஜை நடந்ததாம். அடுத்ததாக இன்று ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு தனது தனி விமானத்தில் சென்றார். அவருடன் இரண்டு பெண்களும் சென்றார்கள். அந்த வீடியோவை பார்த்த பலரும் யார் அந்தப் பெண்கள் என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

நடிகராக இருந்த விஜய் அரசியல் கட்சி தலைவராக மாறி; ஒரு தேர்தலையும் சந்தித்துவிட்டார். கரூர் துயர சம்பவம், சங்கீதா போட்ட பெரிய குண்டு, திரிஷாவுடன் சேர்த்து வைத்து கிசுகிசு, ஜனநாயகன் முடக்கம், லீக், சோம்பேறி அரசியல்வாதி என எக்கச்சக்க விமர்சனங்களையும், பிரச்னைகளையும் சில வருடங்களிலேயே பார்த்துவிட்டார். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அவரது கட்சி தனித்து களமிறங்கியிருக்கிறது. வெற்றி பெறுமா இல்லை ஸ்பாய்லர் செய்யுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Vijay Visits Shirdi Did Trisha Krishnan Accompany Him Viral Video Sparks Buzz
Photo Credit:

உற்சாகத்தில் விஜய்: தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களிலேயே விஜய் இங்கே இருக்கமாட்டார். வெளிநாடுக்கு சென்றுவிட்டு ரிசல்ட் அன்றுதான் வருவார் என்று ஏராளமானோர் சொன்னார்கள். ஆனால் விஜய்யோ எங்கும் செல்லவில்லை. சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வைத்து சிலரை சந்தித்தார். நாளை தவெக வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து ஆலோசனை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு பிறகு அவர் ரொம்பவே உற்சாகத்தில் இருப்பதால்தான் இப்படியான செயல்களில் ஈடுபடுகிறார்; ஸ்டாலினும், உதயநிதியும்தான் ஓய்வெடுக்க சென்றுவிட்டார்கள் என்று தவெகவினர் கூறுகிறார்கள்.

தோல்வி பயமா?: நேற்று திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர்; ஸ்பெஷலாக சத்ரு சமஹார பூஜையை செய்ததாகவும் கூறப்படுகிறது. எதிரிகளை அழித்து, வழக்கு தொல்லையிலிருந்து தப்பிக்கவும்; மன அமைதியை ஏற்படுத்தவும் இந்த பூஜையை செய்வார்கள் என்றும்; அரசியல்வாதிகள் ஏற்கனவே இந்த பூஜையை செய்திருக்கிறார். அதேபோல் கேரளா சமஸ்தானமாக இருந்தபோது அதன் மன்னரோ, தந்தை பெரியாரை அழிப்பதற்காக இந்த பூஜையை செய்தார். ஆனால் அந்த மன்னரே உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நேற்று திருச்செந்தூருக்கு சென்றதே தோல்வி பயத்தினால்தான். அதேபோல் ஆலோசன செய்வது எல்லாம்; தோல்வியை சந்தித்த பிறகு எப்படி எதிரிகளை ஃபேஸ் செய்யலாம் என்பது தொடர்பாகத்தான் என்று அவருக்கு எதிர் தரப்பினர் அடித்து கூறுகிறார்கள். நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு போன அவர் இன்று தனி விமானம் மூலம் ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்றார். இந்நிலையில் அவர் சென்றபோது அவருடன் இரண்டு பெண்களும் சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

யார் அவர்கள்?: அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களில் சிலரோ யார் இந்த பெண்கள் என்று கேள்வி எழுப்பி; விஜய்யின் கேரக்டரை வழக்கம்போல் மட்டமாக பேச தொடங்கிவிட்டார்கள். மேலும் அந்த இரண்டு பெண்களில் ஒருவர் திரிஷாவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன; அந்தப் பெண்ணின் பாடி லாங்குவேஜும், நடக்கும் ஸ்டைலும் அப்படியே திரிஷாவுடன் ஒத்துப்போகிறது என்றும் ஒரு கருத்து கிளம்பியது.

ஆனால் தவெக தரப்பிலிருந்து விஜய்யுடன் பயணம் செய்த பயணிகளின் லிஸ்ட்டை வெளியாகியிருக்கிறது. அதில் திரிஷாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை பற்றி பொய் செய்திகளை பரப்புவதே ஒருதரப்பினரின் வேலையாக இருக்கிறது. இதிலிருந்தே அவர்கள் விஜய்யை பார்த்து எவ்வளவு பயந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X