விஜய் யோசிச்சுதான் செய்வாரு.. முதலமைச்சரின் முதல் லக்கி ஜோடி சங்கவி சொல்றதை கேளுங்க

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது பணிகளை கண்ணும் கருத்துமாக செய்துவருகிறார். ஆனாலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எல்லை மீறி சென்றிருப்பதால் அவர் மீது விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. கூடிய விரைவிலேயே அதனையும் தன்னுடைய கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிடுவார் என்பது அவரது தொண்டர்களின் நம்பிக்கை. இந்நிலையில் விஜய்யின் திரைத்துறை கரியரின் ஆரம்பத்தில் அவருடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சங்கவி கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். வாக்குப்பதிவுக்கு முன்பு அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்; சட்டம் ஒழுங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அருமையாக இருக்கும் என மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சி பொறுப்புக்கு வந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இல்லை. கோவை சிறுமி கொலை, தமிழ்நாடு முழுவதும் அதிகரித்திருக்கும் கொள்ளைகள், கொலைகள் என அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது.

Vijay Will Never Disappoint People Sanghavi s Strong Support Goes Viral
Photo Credit:

வலுக்கும் கண்டனங்கள்: புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சி மற்ற விஷயங்களில் கால அவகாசம்கேட்டு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அப்படி ஒரு ஆப்ஷனை அவர்கள் எதிர்பார்க்கவே கூடாது; கோவை விஷயம் பற்றி எரியும் இந்த சூழ்நிலையிலும் முதலமைச்சர் விஜய் செய்தியாளர் சந்திப்பு நடத்த மறுக்கிறாரே; ஒருவேளை இவர் தமிழ்நாட்டின் மோடியாக இருப்பாரோ என்றும் எதிர்க்கட்சியினர் சகட்டுமேனிக்கு விமர்சனத்தை முன்வைக்க தொடங்கியிருக்கிறார்கள்.

Also Read
என் மனைவி போனது பெரிய இழப்பு.. கதறி அழும் காமெடி நடிகர் முத்துக்காளை.. அய்யோ பாவம்
என் மனைவி போனது பெரிய இழப்பு.. கதறி அழும் காமெடி நடிகர் முத்துக்காளை.. அய்யோ பாவம்

மின் வெட்டும் அதிகம்: சட்டம் ஒழுங்கு பிரச்னை ஒருபக்கம் என்றால்; சென்னையில் அறிவிக்கப்படாத பல மணி நேரம் மின் வெட்டும் தலை தூக்கியிருக்கிறது. இரவில்கூட மக்கள் சாலை மறியல் செய்யும் நிலைக்கு சென்றிருக்கிறார்கள். அதேபோல் அறநிலைய துறை அமைச்சர் ரமேஷின் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் துறை அமைச்சரோ தனக்கு எந்த துறை ஒதுக்கியிருக்கிறார்கள் என்றே தெரியாமல் இருப்பது என பல விசித்திரமான விஷயங்கள் எல்லாம் நடந்துவருகின்றன. அனைத்துக்கும் மேலே தவெக மருத்துவ அணியினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ததெல்லாம் அபத்தத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.

சங்கவி பேட்டி: இப்படி விஜய்யை சுற்றி விமர்சன அம்புகள் ஒவ்வொன்றாக பாய தொடங்கியிருக்கின்றன. அவை அனைத்தையும் விஜய் முறியடித்து நல்லாட்சி தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் விஜய்யுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சங்கவி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய் கண்டிப்பாக மக்களை ஏமாற்றமடையவே செய்யமாட்டார். யோசித்து செய்வார். நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால் நல்லது மட்டும்தான் செய்வார்.

அவர் அப்படித்தான்: நல்ல திட்டங்களை எடுத்துக்கொண்டு வருவார். அதுதான் எங்களுடைய நம்பிக்கை. அவர் ரொம்பவே அமைதியானவர். அவ்வளவு எளிமையாக பழகுவார். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே விஜய்யை பிடிக்கும். அரசியல் அவர் கொஞ்சமே பேசியிருந்தாலும் மக்களின் இதயத்தை பிடித்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக அவர் நல்லது செய்வார்" என்றார். விஜய்யும் சங்கவியும் ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் சேர்ந்து நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X