53 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. விஜயகுமாரின் மகள் அனிதாவின் அழகின் ரசியம் இதுதான்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வனிதா விஜயகுமாரின் மகள் தான் அனிதா விஜயகுமார். மருத்துவரான இவர் தமிழ் சினிமா பக்கமே வராமல், ஒரு மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்த அனிதா, தற்போது சென்னையில் வீடுவாங்கி இங்கே செட்டிலாகி, தனது மகள் தியாவின் திருமணத்தை தடபுடலாக செய்து முடித்தார்.
தற்போது அனிதாவின் மகள் தியா கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஐந்தாம் மாத வளைகாப்பும் தடபுடலாக நடந்தது. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார். தனது ரசிகர்களுக்கு தனது அழகின் ரகசியம் குறித்து விரிவாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

அனிதா விஜயகுமார்: காலை நேரத்தில் ஸ்கின் ஹெல்த்தியாகவும், முகம் நல்லா க்ளோவாகவும் இருக்க சில சிம்பிளான ரொட்டீன்களை பின்பற்றலாம். காலை எழுந்த உடனே டீ அல்லது காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு முழுக்க காலியான வயிற்றில் ஆசிட் அதிகமாக இருக்கும். அதனால் முதலில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. அது வயிற்றிலிருக்கும் ஆசிடை குறைத்து, உடலை அன்றைய நாளுக்குத் தயாராக்கும். அதன் பின் ஒரு பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை கொஞ்சம் இஞ்சி சேர்த்து ஜூஸ் மாதிரி செய்து குடிக்கலாம். இதில் Vitamin C அதிகமாக இருப்பதால் ஸ்கினுக்கும், உடலுக்கும் நல்ல பலன் கிடைக்கும். அதன் பின் டீ அல்லது காஃபி எடுத்துக்கொள்ளலாம்.

பளபளக்கும் முகம்: தினமும் முகத்துக்கும் கொஞ்சம் கவனம் கொடுக்கணும். சிறிய அளவில் face yoga செய்வது blood circulation-ஐ அதிகரித்து, முகத்தில் glow வர உதவும். மேலும் collagen production மேம்பட்டு aging process கொஞ்சம் slow ஆகும். ice water facial செய்தாலும் நல்லது. ஒரு vessel-ல ice cubes மற்றும் தண்ணீர் போட்டு, முகத்தை சில விநாடிகள் dip பண்ணி எடுக்கலாம். இது skin tightening, freshness மற்றும் puffiness குறைய உதவும். அதோடு முகத்திற்கு சில பயிற்சிகளை செய்தால் முகம் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்கும் இதை நான் 30 வயதில் இருந்தே செய்து வருகிறேன் என அனிதா விஜயகுமார் தனது ரசிகர்களுக்கு அழகு டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். இதைப்பார்த்த பார் உங்கள் அழகின் ரசியம் இது தானா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications