விஜயகுமார் மகளுக்கு ஹேப்பி பர்த்டே.. பாசமான தங்கச்சிக்கு அப்பாவுடன் சேர்ந்து ப்ரீத்தி ஹரி வாழ்த்து!
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இளைய மகள் ஸ்ரீதேவி நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு அப்பா விஜயகுமார் மற்றும் அக்கா ப்ரீத்தா ஹரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி வெளியிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமார் தமிழ் சினிமாவில் நாட்டாமையாகவும் பண்ணையாராகவும் பல படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே நடித்து வரும் விஜயகுமார் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு வனிதா விஜயகுமார், ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். வனிதா குடும்பத்துடன் பிரச்சனை செய்து பிரிந்த நிலையில், ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இருவரும் தோழிகளை போலவே பழகி வருகின்றனர்.
தனுஷ் பட ஹீரோயின்: ரிக்ஷா மாமா, அம்மா வந்தாச்சு, டேவிட் அங்கிள் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. காதல் வைரஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீதேவி, மாதவன் நடித்த பிரியமான தோழி படத்தில் தோழியாக நடித்து ஏகப்பட்ட விருதுகளை குவித்தார். ஜீவா நடித்த தித்திக்குதே, தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் தேவதையை கண்டேன் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவே இல்லை. திருமணம் ஆன பின்னர் சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துள்ளார்.
அப்பா மற்றும் அக்கா: ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பா விஜயகுமார் மற்றும் அக்கா ப்ரீத்தா ஹரி இருவரும் கோயிலில் ஸ்ரீதேவியுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்து வாழ்த்தியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர்யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக ஸ்ரீதேவி செயல்பட்டு மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான சுந்தரகாண்டா படத்திலும் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்தும் ரசிகர்கள்: 38 வயதாகும் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் குழந்தைகள் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், கியாரா அத்வானியை விட நீங்க தான் ரொம்ப அழகு என கம்பேர் செய்த போட்டோக்களும் டிரெண்டாகின.


Click it and Unblock the Notifications











