வந்தாள் மகாலட்சுமியே.. பட்டுப் புடவையில் தேவதை போல ஜொலித்த ஸ்ரீ தேவி!

சென்னை: விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய வீட்டில் வரலட்சுமி பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் மகளாக ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக 1992ல் சத்யராஜ் நடித்த ரிக்சா மாமா திரைப்படத்தில் அறிமுகமானார்.

Vijayakumar daughter sridevi vijayakumar silk saree latest photos

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி: குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீ தேவி தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற வெற்றி படங்களில் குடும்ப பெண்ணாக அருமையாக நடித்திருப்பார். வனிதாவின் தங்கையான இவர் பெரும்பாலும் புடவைகளையே அணிந்தே படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவை விட்டு விலகினார்: கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், இவர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் 2 படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திவரும் இவர், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Vijayakumar daughter sridevi vijayakumar silk saree latest photos

வந்தாள் மகாலட்சுமியே: இந்நிலையில், நேற்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மகாலட்சுமியின் சிலையை வைத்து வழிபட்டுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் அப்லோடு செய்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த சிலையைவிட இந்த சிலை அழகாக இருக்கிறது என்று வந்தாள் மகாலட்சுமியே என கவிதை பாடி கமெண்ட் பாக்சை நிரம்பி வருகின்றனர்.

Vijayakumar daughter sridevi vijayakumar silk saree latest photos

வரலட்சுமி விரதம்: வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியமும், குடும்பத்தில் செல்வம் பெருகும், மங்களகரமான வாழ்க்கை அமையும் என்பதால் பல பிரபலங்கள் நேற்று வரலட்சுமி விரதம் இருந்தனர். நடிகை விஜயலட்சுமி, நடிகை ஸ்நேகா, நக்‌ஷத்ரா, நடிகை பிரணித்தா என பல நடிகைகள் வரலட்சுமி விரதம் இருந்து, பூஜை செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X