விஜயலட்சுமிக்கு மெகா சர்ப்ரைஸ்.. "கசட தபற" வில் நடிக்க வாய்ப்பு!

சென்னை : விஜயலட்சுமி சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ''கசட தபற" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயலட்சுமி, வெங்கட் பிரபுவின் சென்னை28 படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இப்படம் ஹிட்டானதால் அதில் நடித்த அனைவருக்கும் வாய்ப்புகள் வந்து குவிந்தன.

 Vijayalakshmi in the movie Kasata thapara

அடுத்ததாக மிஸ்கினின் இயக்கத்தில் உருவான அஞ்சாதே படத்தில் நடித்தார் விஜயலட்சுமி. அந்த படமும் ஹிட்டானதைத் தொடர்ந்து சரோஜா, அதே நேரம் அதே இடம் , கற்றது களவு ,வன யுத்தம் ,பிரியாணி, சென்னை28-2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். சிலப்படங்களின் தொடர் தோல்வியால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இதற்கு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த நாயகி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

 Vijayalakshmi in the movie Kasata thapara

அந்த சமயத்தில் விஜயலஷ்மிக்கு பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, அதை சரியாக பயன்படுத்தி கொண்ட விஜயலஷ்மி நாடகத்தில் இருந்து விலகி, பிக்பாஸ் சீசன் 2ன் நுழைந்தார். 67 நாட்கள் கழிந்து பாதியில் சென்றாலும் இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் நல்ல பெயர் எடுத்து வெளியே வந்தார் .

 Vijayalakshmi in the movie Kasata thapara

பிக்பாஸ்க்கு பிறகு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த விஜயலஷ்மிக்கு, பெரிய மேடை கிடைத்தும் அவரால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை. எதிர் பார்த்தபடி படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'டும் டும் டும்' என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 Vijayalakshmi in the movie Kasata thapara

தற்போது விஜயலஷ்மி சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசட கபற' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020லாவது இவருக்கு நல்ல யோகம் அடிக்குமா என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X