ஹீரோயின்

By Staff

"பிரண்ட்ஸ்" விஜயலட்சுமி ரொம்பவும் விசனத்துடன் இருக்கிறார். என்னவாம்?

சமீபத்தில் நெய்வேலியில் நடந்த திரையுலக பேரணியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடு என்றுகோரினார் அல்லவா?

அதனால் கன்னட சினிமாக்காரர்கள் விஜயலட்சுமி கடும் காட்டத்துடன் இருக்கிறார்கள்.

பெங்களூரில் பிறந்து, வசித்தாலும் விஜயலட்சுமி முழுத் தமிழ் பெண். நெய்வேலி போராட்டத்துக்குப் பின் அவரைகன்னட சினிமாகாரர்கள் கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜயலட்சுமியை வைத்து இனிமேல் யாரும் படம் எடுக்கக் கூடாது என்று வாய் மொழி உத்தரவுபோட்டுள்ளார்களாம்.

இதனால் புதிதாக ஒரு கன்னடப் படம் அவருக்கு புக் ஆகவில்லை.

போனால் போகட்டும் போடா, தமிழ் சினிமா என்னைக் கைவிடாது என்று தைரியமாக இருந்த விஜயலட்சுமிக்குபடு ஏமாற்றம் தரும் வகையில் புதிதாக ஒரு தமிழ்ப் படம் புக் ஆகவில்லையாம்.

தற்சமயம் அவரது கையில் இருப்பது நிலவினிலே மட்டும்தான்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டதே என்ற விசனத்தில் இருக்கும் விஜயலட்சுமி, தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களை நேரில் சான்ஸ் கேட்க முடிவு செய்துள்ளாராம்.

பாரதிராஜாகிட்டேயும் ஒரு அப்ளிகேஷனை தட்டி விடுங்களேன் விஜி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X