»   »  சென்னை-600 028

சென்னை-600 028

Subscribe to Oneindia Tamil

எஸ்பிபி மகன் சரண் தயாரிக்க, கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் தான்சென்னை-600 028. இப்படத்தின் மூலம் கிறிஸ்டைன் செடக் என்ற மடக் நாயகியை அறிமுகப்படுத்துகிறார்கள்.

பெரும் இளமைப் பட்டாளத்துடன் இப்படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. பின்னணிப் பாடகராக, நடிகராகதிரையுலகில் வலம் வந்த வெங்கட் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இயக்கம் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது. இருந்தாலும் நானும் இயக்குனராகி விட்டேன். எல்லாம்எஸ்.பி.பி.சரண் கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என சரண் மீது நட்பைப் பொழிகிறார்வெங்கட்.

படத்தின் கதை இளைஞர்களைப் பற்றியது என்பதால் 14 இளைஞர்களைத் தேர்வு செய்து நடிக்கவைத்துள்ளாராம் வெங்கட். படத்தில் ஹீரோ என்று தனிப்பட்ட யாரும் கிடையாதாம். சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் அந்தப் பகுதியில் நடைபெறுவது போலகாட்சிகளை அமைத்துள்ளாராம்.

படத்திற்கு 2 ஹீரோயின்கள். ஒருவர் விஜயலட்சுமி, இன்னொருவர் கிறிஸ்டைன் செடக். இவர்களில்விஜயலட்சுமி ஏற்கனவே சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல இயக்குநர்அகத்தியனின் மகள் தான்.

எனது படத்தில் விஜயலட்சுமியை நடிக்க வைக்க வேண்டும் என்று அகத்தியனிடம் வெங்கட் கேட்டபோது, இதுஉனது படம், எனவே தைரியமாக அழைத்துப் போ என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தாராம் அகத்தியன்.

தான் சிறு வயதில் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்தபோது சந்தித்த சம்பவங்கள், ஏற்பட்ட சுவையானஅனுபவங்களைத்தான் இப்படத்தின் மூலம் சொல்லப் போகிறேன். முற்றிலும் இளைஞர்களுக்கான படம்என்பதால் யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைக்க கேட்டுக் கொண்டாராம். அவரும் பண்ணிட்டாப் போச்சுஎன்று சந்தோஷமாக ஒத்துக் கொண்டாராம். அத்தோடு நில்லாமல் 3 பாட்டையும் சட்டுப் புட்டென்று போட்டுக்கொடுத்து விட்டாராம்.

படத்தின் இன்னொரு ஹீரோயினான கிறிஸ்டைன் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நல்ல ஹைட்டு, சரியானமுகவெட்டு என தூள் ஃபிகராக இருக்கிறார் கிறிஸ்டைன். இப்படிப்பட்ட அழகான முகத்தை வைத்துக் கொண்டுகிளாமர் இல்லாமலா என்று வெங்கட்டிடம் கேட்டபோது, அதுதான் கிடையாது. இந்தப் படம்இளைஞர்களுக்கான படம்தான். ஆனால் அதற்காக கிளாமரை போட்டு நான் நிரப்பப் போவதில்லை.

டீன் ஏஜ் வயது முதல் இளைஞர்கள் குடும்ப வாழ்க்கைக்குப் போகும் வரைதான் ஜாலி, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம். அதை மட்டுமே நான் காட்டியுள்ளேன். அத்தோடு நல்ல மெசேஜ் ஒன்றையும் வைத்துள்ளேன்என்று கண்ணை சிமிட்டுகிறார் வெங்கட்.

கேக்க சந்தோஷமாத்தான் இருக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil