Azhagiya thamizh magan: விஜய்யுடன் இணைந்து நடித்த சிறுமி.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

சென்னை: விஜய்யின் அழகிய தமிழ் மகன் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். படத்தில் ஹீரோவிற்கு ஏற்படும் வித்தியாசமான சக்தியால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. பணக்கார வீட்டு பெண்ணான ஸ்ரேயாவை அபகரிக்க வில்லன் விஜய் செய்யும் முயற்சிகள் அதை தடுக்க ஹீரோவின் போராட்டம் போன்றவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து சிறுமி நிவேதிதா நடித்திருந்தார். ரேணு என்ற கேரக்டரில் மிகவும் சுட்டிகையான குழந்தையாக இந்தப் படத்தில் அவரது கேரக்டர் அமைந்திருந்தது. மிகவும் ஆப்டான தேர்வாக இந்த சிறுமி காணப்பட்டார். தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நிவேதிதா நடித்திருந்தார். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், திலீப் உள்ளிட்டவர்களுடன் நடித்திருந்தார் நிவேதிதா. கேரளாவின் மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள நிவேதிதா கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இளம்பெண்ணாக இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன.

Vijay s Azhagiya thamizh magan movie baby Niveditha s recent clicks

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் படங்கள் குழந்தைகளையும் கவரும்வகையில் அமைந்து வருகின்றன. தன்னுடைய படங்களில் குழந்தைகளை கவரும்வகையிலா காட்சிகளை மட்டுமில்லாமல் குழந்தைகளின் கேரக்டர்களையும் பிரத்யேகமாக அமைத்து குழந்தைகளை கவர்ந்து வருகிறார் விஜய். அந்த வகையில் தெறி படத்தில் மீனாவின் மகள் நைனிகா, அழகிய தமிழ் மகன் படத்தில் பேபி நிவேதிதா ஆகியோர் முக்கியமான கவனத்தை பெற்றவர்கள். இதில் அழகிய தமிழ்மகன் படத்தில் ரேணு என்ற கேரக்டரில் நடித்திருந்த நிவேதிதா சிறிது நேரமே வந்தாலும் படத்தின் முக்கியமான கேரக்டராக இருப்பார்.

இரட்டை வேடங்களில் விஜய்: இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார். அந்தவகையில் ஹீரோ விஜய்க்குள் இருக்கும் ஒரு பவர் குறித்து அவருக்கு நிவேதிதா மூலம்தான் தெரியவரும். சில காட்சிகளிலேயே ரேணு என்ற இந்த சிறுமியில் கேரக்டர் உயிரிழப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக விஜய்யுடன் இணைந்து கவிதை எழுதி பள்ளியில் பரிசு வாங்குவதாக காட்டப்பட்டிருக்கும். தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நிவேதிதா நடித்திருந்தார். அபுதாபியை சேர்ந்த இவருடைய அக்கா நிரஞ்சனாவும் ஒரு நடிகைதான். மலையாளத்தில் ஜெயராம், திலீப், மோகன்லால் உள்ளிட்டவர்களுடன் நிவேதிதா நடித்துள்ளார்.

Vijay s Azhagiya thamizh magan movie baby Niveditha s recent clicks

பேபி நிவேதிதா: கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிக்காமல் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார் நிவேதிதா. இந்நிலையில் தற்போது இளம்பெண்ணாக இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சிறுமியாக இருந்தபோது எப்படி தன்னுடைய சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தாரோ அதேபோல தற்போது அவர் தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். அடுத்த ஹீரோயின் ரெடி என்றே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய சிரிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நிவேதிதா.

Vijay s Azhagiya thamizh magan movie baby Niveditha s recent clicks

அழகிய தமிழ் மகன் படம்: விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது அழகிய தமிழ் மகன் படம். இதில் ஆள் மாறாட்டம் செய்து சிறப்பான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். படத்தின் பாடல்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் மிகச்சிறப்பான வரவேறபை பெற்றிருந்தன. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவந்த விஜய்க்கு இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் சிறுமி நிவேதிதாவும் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தார். ஸ்ரேயா, சந்தானம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் சிறப்பான அமைந்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X