அழகூரில் பூத்தவளே.. ஏஐ அழகிக்கே டஃப் கொடுக்கும் ’கோட்’ ஹீரோயின்.. அசந்துப்போன ஃபேன்ஸ்!

சென்னை: தளபதி விஜய்யின் The Greatest of All Time படத்தில் இளம் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்து வருகிறார் என்றும் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அசத்தலான போட்டோக்களை போட்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னர் அப்பான மீனாட்சி சவுத்ரி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.

தளபதி 68 படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என புத்தாண்டை முன்னிட்டு டைட்டில் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. ஜோதிகா, பிரியங்கா மோகன் தான் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி என முதலில் தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் பூஜையின் போது சினேகா, லைலா மற்றும் டோலிவுட் நடிகை மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகைகள் இணைந்துள்ள அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

Vijay s GOAT Heroine Meenakshi Chaudhary latest Saree Stills

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த மீனாட்சி சவுத்ரி என்பது கூடுதல் தகவல்.

கோட் ஹீரோயின்: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் என இந்த ஆண்டு மீனாட்சி சவுத்ரி நடித்த 2 படங்களும் ஓடவில்லை. அடுத்ததாக கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். பல் மருத்துவ படிப்பை படித்து வந்த இவர் 2018ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றார். இச்சட்டா வாஹனமுலு நில்லுபருடா படத்தின் மூலம் 2021ல் தான் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். 2022ல் கில்லாடி மற்றும் ஹிட் - தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து அறிமுகமானார்.

மகேஷ் பாபு படத்தில் டம்மி: ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவர் நடித்திருந்தார். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் மீனாட்சி சவுத்ரி தான் நடித்திருந்தார். ஸ்ரீலீலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், மீனாட்சி சவுத்ரிக்கு டம்மி ரோல் கொடுத்திருந்தனர். சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவருக்கு பெரிதாக வேலைகள் இல்லை. இந்நிலையில், கோட் படம் தனது கரியரை மாற்றும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Meenakshi Chaudhary latest Saree Stills

அழகூரில் பூத்தவளே: கோயிலில் உள்ள சிலை போல ஏஐ எடிட்டே தோற்று விடும் அழகில் தற்போது மீனாட்சி சவுத்ரி அசத்தலான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், நல்லா ஷைன் ஆகிட்டு வருகிறாரே என தளபதி ரசிகர்கள் மாளவிகா மோகனனுக்கு வரவேற்பு கொடுத்தது போல மீனாட்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X