விஜய்க்கு இது தெரியாது? ஜனநாயகன் இயக்குநர் விண்வெளியில் இருக்காரா? கொந்தளித்த சனம் ஷெட்டி!

சென்னை: அம்புலி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு புகழைத் தேடித் தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், அவ்வப்போது இணையத்தில் பல விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், தளபதி விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி உதவி இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

சிவனேனு நான் இருந்தாலும், என்னை தேடித் தேடி பிரச்சனை வருகிறது. இது, நடிகர் விஜய் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால், இதுபற்றி வீடியோ போடலாமா... வேண்டாமா என்று யோசித்தேன். ஆனால், இதுபற்றி பேசியே ஆகவேண்டும் என்பதால், வீடியோ வெளியிடுகிறேன். டிக்னிட்டி ஆப் லேபர் என்பது, யார் எந்த தொழில் செய்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி மரியாதை கொடுக்கணும், அவர்களின் உழைப்பு, திறமையை மதிக்க வேண்டும் என்பது தான் லேபர்ஸ் டேவின் முக்கியமான கொள்கை. இந்த நாளில், என்னோட உழைப்பு, என்னோட திறமை, என்னை அவமதித்துவிட்டார்கள். ஜனநாயகன் படத்தின் உதவி இயக்குநர் ஒருவரிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். இந்த படம் தான் விஜய் நடிக்கும் கடைசி படம், இனி மேல் அவருடன் சேர்ந்து நடிக்க முடியாதே என்பதால், அவருடன் நடித்துவிட வேண்டும் என்கிற ஆசையில், உதவி இயக்குநர் ஒருவரிடம் கடந்த ஆறு மாதமாக நான் வாய்ப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அவரோ கண்டிப்பாக ஏதாவது வாய்ப்பு வரும் போது சொல்கிறேன் என்றார்.

Vijay jana nayagan anam shetty

நடிகை சனம் ஷெட்டி: இப்போது சொல்கிறேன், நாளை சொல்கிறேன் என்று கடந்த 6 மாதமாக சொல்லி என்னை அலைக்கழித்து உள்ளார். பாலியல் ரீதியாக எந்த தொந்தரவும் இல்லை. ஆனால், என்னை அலையவைத்துள்ளார் என்பது தற்போது தான் எனக்கு தெரியவந்துள்ளது. படம் லாஸ்ட் ஷெடியூல் வந்து விட்டதால், நான் சம்மந்தப்பட்ட நபரிடம், எனக்கு வாய்ப்பு கொடுங்க, கொடுக்காமல் போங்க, நான் இரண்டு நிமிடம் இயக்குநரை பார்த்து பேச வேண்டும் அதற்காவது அனுமதி வாங்கி கொடுங்கள் என்று கேட்டேன். அப்போது, அந்த நபர் நான் சிறிய அளவில் இருக்கும் உதவி இயக்குநர் என்னால், உங்களை அவரிடம் அழைத்து செல்ல முடியாது என்று சொன்னார். இதை ஆறு மாதத்திற்கு முன்பே சொல்லி இருக்கலாமே. இயக்குநர் என்ன மாஸ், ஜூபிடர்லயா இருக்காரு, நானும் 15 வருடத்திற்கும் மேலாக சினிமாவில் இருக்கும் நடிகை தான், நானும் லீட் ரோலில் நடித்து இருக்கிறேன்.

எப்போதுமே மார்க்கெட் வேல்யூ இருக்கும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்படி வேல்யூ இல்லாத நடிகைகளை அலையவிடுகிறார்கள். பெரிய நடிகைகள் என்றால் இப்படி அலைய விடுவீர்களா? சினிமாவில் இருக்கும் இந்த பாரபட்சம் தான் எனக்கு பிரச்சனையாக தெரிகிறது. இந்த விஷயம் நிச்சயமாக தளபதிக்கு தெரியாது, அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். என்னை அலையவிட்ட உதவி இயக்குநரின் தகவலை நான் தருகிறேன், என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுங்க என நடிகை சனம் ஷெட்டி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

https://www.instagram.com/reel/DJHgC3ySqk0/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X