»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திங்கள் கிழமை தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகை விஜியின் உடல் செவ்வாய் கிழமை தகனம் செய்யப்பட்டது.

காதல் தோல்வி காரணமாக நடிகை விஜி தனது வீட்டில் திங்கள் கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை செய்திதிரையுலகத்தினரை அதிரச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

விஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால்செவ்வாய் கிழமை காலை வரை அவரது உடல் சவக் கிடங்கிலேயே இருந்தது.

பிரேத பரிசோதனை முடிந்த பின் விஜியின் தந்தை அஸ்வத்தும், நடிகர் நெப்போலியனும் விஜயின் உடலை சென்னை மகாலிங்கபுரம் லேடி மாதவன் சாலையில் இருக்கும்அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் விஜயகாந்த், நெப்போலியன், ராமராஜன், நடிகைகள் ரேவதி, ராதிகா உள்ளிட்டபலர் அஞ்சலி செலுத்தினர்.

விஜியின் உடல் வேன் மூலம் பெசண்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

அவசர முடிவெடுத்து விட்டார் விஜி: விஜயகாந்த்

விஜியின் காதலர் தப்பி ஓட்டம்

3 முறை தற்கொலைக்கு முயன்றவர் விஜி

விஜியின் கண்ணீர் கடிதம்

காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை

Read more about: chennai, cinema, cremated, tamilandu, viji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil