ஹீரோயின்

By Staff

சென்னை:

தன்னை மணப்பதாக கூறி காதலர் ஏமாற்றியதைக் கண்டித்து அவர் வேலை பார்க்கும்டி.வி. நிறுவனத்தின் முன் உண்ணாவிரதம் இருக்க நடிகை விஜி திட்டமிட்டுள்ளார்.

கோழி கூவுது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜி. அந்த படத்தின்வெற்றி காரணமாக சாட்சி, பூவே உனக்காக உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர்ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் நடிகைகள் பட்டியலில் சேர்ந்தார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நலம் சீரடைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவரது கால்கள் செயலிழந்தன. அவர்நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.

முதல்வர் கருணாநிதி நிதி உதவி செய்ததால் மீண்டும் சிகிச்சை பெற்று உடல் தேறியது.

இதற்குப் பிறகு தொலைக் காட்சித் தொடர்களில் விஜி நடிக்கத் தொடங்கினார்.இந்நிலையில் திரைப்பட இயக்குனர் அரவிந்தராஜின் தம்பியும் தொலைக்காட்சி சீரியல்இயக்குனருமான ஏ.ஆர். ரமேஷ் என்பவருடன் விஜிக்கு காதல் ஏற்பட்டது.

தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ரமேஷ் ஏமாற்றிவிட்டார் என விஜி கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

என் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாழ்வு முடிந்து விட்டது என்று கலங்கியிருந்த போதுமுதல்வர் கருணாநிதி செய்த நிதி உதவியால் உயிர் பிழைத்தேன்.

உடல் நலம் பெற்ற பின் நான் இயக்குனர் அரவிந்த ராஜ் இயக்கிய தொலைக் காட்சிதொடரில் நடித்து வந்த போது அவரது தம்பி ரமேஷின் அறிமுகம் கிடைத்தது. என்கஷ்டங்களைக் கேட்ட அவர் எனக்கு ஆறுதல் கூறினார்.

அடிக்கடி என் வீட்டிற்கும் வர ஆரம்பித்தார். எனக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டது.ரமேஷ் தன் மனைவி சரிப்பட்டு வரவில்லை எனவும் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றார். நான் மறுத்தால் இறந்து விடுவேன் எனவும்சொன்னார். நான் அவரை நம்பினேன்.

இந் நிலையில் அவருக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை கிடைத்தது. அவர்என்னுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். என்னை திருமணம் செய்து கொண்டால் தன் வேலைபோய்விடும் என கூறி மறுத்து விட்டார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் என் உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டும்மருத்துவமனையில் அனுமதிப்பட்டேன். அங்கும் அவர் என்னை வந்துபார்க்கவில்லை.

நான் மருத்துவமனையிலிருந்து திரும்பியவுடன் என் தோழிகள் அவரிடம் நியாயம்கேட்டதற்கு நான் அவளைத் தேடிபோகவில்லை. அவள்தான் வந்து விழுந்தாள் எனகூறியுள்ளார்.

இது என்னை திட்டமிட்டு ஏமாற்றிய செயல். அவர் என்னை திருமணம் செய்துகொள்ளும் வரை அவர் வேலை செய்யும் டி.வி. நிறுவனம் மூன் உண்ணாவிரதம்இருப்பேன் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X