வெல்கம் பேக் விக்ரம்.. "துருவ நட்சத்திரம்" 2-வது டீசர் வெளியானது!
சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் - விக்ரம் முதல் முறையாக இணைந்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்' இப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று விக்ரமின் பிறந்த நாள். அதன் ஸ்பெஷலாக 'துருவ நடசத்திரம்' படத்தின் 2-வது டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போன் கால்.. ப்ளைட்.. பென்ஸ் கார்.. அந்த ஸ்டைலிஷ் நடை என கவர்கிறார் விக்ரம்.
இந்நிலையில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு போன் கால், ப்ளைட், பென்ஸ் கர் என விக்ரம் ஸ்டைலில் கலக்கலாக வருகிறார் விக்ரம். அவர் வயதுக் கேற்ற வேடம் என்பதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











