41 வயதிலும் என்னவொரு வசீகரம்.. நீச்சல் குளத்தில் பில்லா நயன்தாரா போல போஸ் கொடுத்த விமலா ராமன்!

சென்னை: நடிகை விமலா ராமன் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி வருகின்றன. பாலசந்தர் இயக்கிய 101வது படமான பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விமலா ராமன் கவர்ச்சி கன்னியாக தனது 41வது வயதிலும் நீச்சல் உடையை அணிந்து கொண்டு தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.

உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் படங்களில் ஹீரோவாக நடித்து வந்த வினய் சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஹிப் ஹாப் ஆதியின் வீரன் மற்றும் வரும் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாக உள்ள ஹனுமன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள வினய்யை காதலித்து வரும் விமலாராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிராண்ட்மா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Vimala Raman shares Billa Nayanthara like Swim wear photos and stuns fans

சேரன் ஜோடி: பொய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விமலா ராமனுக்கு ஒடியாவில் பாஸிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் மலையாளத்தில் வெளியான சுரேஷ் கோபியின் டைம் படம் அவருக்கு அங்கு நல்ல நேரத்தைக் கொடுக்க சுமார் ஒரு டஜன் மலையாள படங்களில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார். சேரன் ஹீரோவாக நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் என்ட்ரி கொடுத்தார் விமலா ராமன். அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, கன்னட படங்களில் அதிகமாக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Vimala Raman shares Billa Nayanthara like Swim wear photos and stuns fans

வினய் காதலி: உன்னாலே உன்னாலே படத்தில் சாக்லேட் பாயாக அறிமுகமான வினய் ஜெயம் கொண்டான் படத்தில் மாஸ் ஹீரோவாக நடித்து மிரட்டினார். சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், இந்த வாரம் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் வீரன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில், அவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார் விமலா ராமன். இருவரும் ஒன்றாக வெளிநாடுகளில் நெருக்கமாக ஊர் சுற்றி வரும் பல போட்டோக்களை அவர்களே இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டாவது இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Vimala Raman shares Billa Nayanthara like Swim wear photos and stuns fans

பில்லா நயன்தாரா போல: நடிகை விமலா ராமன் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு டூபீஸ் உடையை கலக்கலாக அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நீச்சல் உடையை அணிந்து கொண்டு நீச்சல் அடிக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X