»   »  பொய் அழகி விமலா ராமன்! பொய் நாயகி விமலா ராமன் கோலிவுட்டை கவர்ந்து வருகிறார்.மாடல் அழகியான விமலா ராமன், பிரகாஷ் ராஜ் தயாரிப்பில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவாகும் பொய் படத்தில் உதய்கிரண் ஜோடியாக நடித்து வருகிறார். சிட்னியில் பிறந்து வளர்ந்த இந்தியரான விமலா ராமன் திரைப்படங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்றாலும்இதற்கு முன்பு இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் அலை மோதினவாம்.ஆனாலும் படத்தில் நடிப்பதை விரும்பாத விமலா ராமன், வந்த வாய்ப்புகளையெல்லாம் உதறித் தள்ளியுள்ளார். அப்படித் தான்பொய் வாய்ப்பும் வந்துள்ளது. இந்த வாய்ப்பை விமலாவால் தட்டிக் கழிக்க முடியவில்லையாம். காரணம், கே.பாலச்சந்தர்.பாலச்சந்தர் படங்களை உயிராக பார்க்கும் விமலாவுக்கு, அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கசக்குமா? உடனேஒத்துக் கொண்டாராம். அதன் பிறகு பாலச்சந்தரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தின் கதையைக் கூறிய கே.பி., கதைபிடித்திருக்கிறதா என்று கேட்டாராம்.கதையை விட நீங்கள் சொன்ன பாணி எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எப்ப நான் ஷூட்டிங் வரணும் என்று கேட்டுகே.பியையே அசத்தி விட்டாராம். பொய் இப்போது இலங்கையில் படு வேகமாக வளர்ந்து வருகிறது.விமலா ராமன் தொழில் ரீதியான டான்ஸரும் கூட. தனது ஐந்தாம் வயதிலேயே பரதநாட்டியம் கற்க தொடங்கினார். சிட்னியில்தொடங்கி மகாபலிபுரம், பெங்களூர் உட்பட பல இடங்களில் இவர் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.ரோஜா கண்ணன் என்பவரின் பயிற்சியில் நடனத்தைக் கற்றுத் தேர்ந்துள்ள விமலா ராமன், வசனத்தைப் பேசுவதிலும்கே.பியிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறாராம். விமலாவைப் பற்றி ஒரு கொசுறு தகவல்: இவர் கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். உருண்டு, திரண்ட பெரிய கண்களுடன் பளிச் அழகுடன் விளங்கும் விமலா ராமன் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் எனகூறுகிறார்கள். ஆனால் விமலா ராமன் நல்லா தமிழ் பேசுகிறார், அதுதான் சிக்கல்!

பொய் அழகி விமலா ராமன்! பொய் நாயகி விமலா ராமன் கோலிவுட்டை கவர்ந்து வருகிறார்.மாடல் அழகியான விமலா ராமன், பிரகாஷ் ராஜ் தயாரிப்பில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவாகும் பொய் படத்தில் உதய்கிரண் ஜோடியாக நடித்து வருகிறார். சிட்னியில் பிறந்து வளர்ந்த இந்தியரான விமலா ராமன் திரைப்படங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்றாலும்இதற்கு முன்பு இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் அலை மோதினவாம்.ஆனாலும் படத்தில் நடிப்பதை விரும்பாத விமலா ராமன், வந்த வாய்ப்புகளையெல்லாம் உதறித் தள்ளியுள்ளார். அப்படித் தான்பொய் வாய்ப்பும் வந்துள்ளது. இந்த வாய்ப்பை விமலாவால் தட்டிக் கழிக்க முடியவில்லையாம். காரணம், கே.பாலச்சந்தர்.பாலச்சந்தர் படங்களை உயிராக பார்க்கும் விமலாவுக்கு, அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கசக்குமா? உடனேஒத்துக் கொண்டாராம். அதன் பிறகு பாலச்சந்தரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தின் கதையைக் கூறிய கே.பி., கதைபிடித்திருக்கிறதா என்று கேட்டாராம்.கதையை விட நீங்கள் சொன்ன பாணி எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எப்ப நான் ஷூட்டிங் வரணும் என்று கேட்டுகே.பியையே அசத்தி விட்டாராம். பொய் இப்போது இலங்கையில் படு வேகமாக வளர்ந்து வருகிறது.விமலா ராமன் தொழில் ரீதியான டான்ஸரும் கூட. தனது ஐந்தாம் வயதிலேயே பரதநாட்டியம் கற்க தொடங்கினார். சிட்னியில்தொடங்கி மகாபலிபுரம், பெங்களூர் உட்பட பல இடங்களில் இவர் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.ரோஜா கண்ணன் என்பவரின் பயிற்சியில் நடனத்தைக் கற்றுத் தேர்ந்துள்ள விமலா ராமன், வசனத்தைப் பேசுவதிலும்கே.பியிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறாராம். விமலாவைப் பற்றி ஒரு கொசுறு தகவல்: இவர் கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். உருண்டு, திரண்ட பெரிய கண்களுடன் பளிச் அழகுடன் விளங்கும் விமலா ராமன் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் எனகூறுகிறார்கள். ஆனால் விமலா ராமன் நல்லா தமிழ் பேசுகிறார், அதுதான் சிக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொய் நாயகி விமலா ராமன் கோலிவுட்டை கவர்ந்து வருகிறார்.

மாடல் அழகியான விமலா ராமன், பிரகாஷ் ராஜ் தயாரிப்பில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவாகும் பொய் படத்தில் உதய்கிரண் ஜோடியாக நடித்து வருகிறார்.

சிட்னியில் பிறந்து வளர்ந்த இந்தியரான விமலா ராமன் திரைப்படங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்றாலும்இதற்கு முன்பு இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் அலை மோதினவாம்.

ஆனாலும் படத்தில் நடிப்பதை விரும்பாத விமலா ராமன், வந்த வாய்ப்புகளையெல்லாம் உதறித் தள்ளியுள்ளார். அப்படித் தான்பொய் வாய்ப்பும் வந்துள்ளது. இந்த வாய்ப்பை விமலாவால் தட்டிக் கழிக்க முடியவில்லையாம். காரணம், கே.பாலச்சந்தர்.

பாலச்சந்தர் படங்களை உயிராக பார்க்கும் விமலாவுக்கு, அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கசக்குமா? உடனேஒத்துக் கொண்டாராம். அதன் பிறகு பாலச்சந்தரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தின் கதையைக் கூறிய கே.பி., கதைபிடித்திருக்கிறதா என்று கேட்டாராம்.


கதையை விட நீங்கள் சொன்ன பாணி எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எப்ப நான் ஷூட்டிங் வரணும் என்று கேட்டுகே.பியையே அசத்தி விட்டாராம். பொய் இப்போது இலங்கையில் படு வேகமாக வளர்ந்து வருகிறது.

விமலா ராமன் தொழில் ரீதியான டான்ஸரும் கூட. தனது ஐந்தாம் வயதிலேயே பரதநாட்டியம் கற்க தொடங்கினார். சிட்னியில்தொடங்கி மகாபலிபுரம், பெங்களூர் உட்பட பல இடங்களில் இவர் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ரோஜா கண்ணன் என்பவரின் பயிற்சியில் நடனத்தைக் கற்றுத் தேர்ந்துள்ள விமலா ராமன், வசனத்தைப் பேசுவதிலும்கே.பியிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறாராம்.

விமலாவைப் பற்றி ஒரு கொசுறு தகவல்: இவர் கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

உருண்டு, திரண்ட பெரிய கண்களுடன் பளிச் அழகுடன் விளங்கும் விமலா ராமன் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் எனகூறுகிறார்கள்.

ஆனால் விமலா ராமன் நல்லா தமிழ் பேசுகிறார், அதுதான் சிக்கல்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil