twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமலா.. ஆஸ்திரேலிய கங்காரு... ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமலா ராமனுக்கு கோலிவுட் நிரந்தரமாக கதவைத் திறந்துவிடத் தயாராகி வருகிறது.சிட்னியில் பிறந்து வளர்ந்த இந்தத் தமிழ்ப் பெண் அந்த ஊரில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். அதைத் தொடர்ந்துஆஸ்திரேலியாவில் பல அழகிப் போட்டிகளில் பங்கேற்றவர் பின்னர் மும்பைக்கு வந்தார்.இந்தியாவின் சார்பில் மிஸ் வோல்ர்ட் போட்டியில் பங்கேற்ற விமலா ராமனுக்கு மிஸ் போட்டேஜெனிக் பட்டமே மிஞ்சியது.இதையடுத்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டவரை கே.பாலசந்தர் தனது தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்துள்ளார்.தனது குரு கே.பிக்காக நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் பொய் படத்தில் இவர் தான் நாயகி. இந்தப் படத்துக்காக புதிதாக ஒரு பிரஷ் முகத்தைத் தேடிய கே.பிக்கு விமலா ராமன் குறித்து கமல்ஹாசன் எடுத்துச் சொல்ல,நேரடியாக சிட்னிக்கு ஒரு போன் போட்டு வரச் சொன்னாராம். படபடப்பாக சென்னைக்கு வந்திறங்கி மயிலாப்பூரில் உள்ளகவிதாலயா ஆபிசுக்கு ஓடிப் போய் கே.பாலசந்தரைப் பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி.என்ன, ஏது என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் எனது அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின், ரெடியாகிடு என்றுசொல்லிவிட்டாராம்.பொய் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விமலா ராமன் கொஞ்சம் கோடம்பாக்கத்தில் வெயிட் பண்ணிப் பார்த்தார்.அடுத்ததாக யாரும் வராததால் சான்ஸ் பிடிக்கும் வேலை என்றெல்லாம் அலையாமல் சிட்னிக்கே போய்விட்டார்.இப்போது அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர்பிரஷாந்த். தனது படத்தில் இவரை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளாராம். கோவை தான் விமலா ராமனின் சொந்த ஊராம். இவரது அப்பா பட்டாபிராமன் 30 வருடமாக ஆஸ்திரேலியாவிலேயே செட்டில்ஆகிவிட்டதால் அந்த ஊர்ப் பெண்ணாகிவிட்டார். ஆனாலும் அட்சரம் பிசகாமல் மிக அழகாகத் தமிழ்ப் பேசுகிறார். கூடவே பரதநாட்டியத்திலும் எக்ஸ்பர்ட்.ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனம் ஒன்றில்வேலைக்குப் போக இருந்தபோது, அழகிப் போட்டியில் சும்மா பங்கேற்றாராம்.ஆஸ்திரேலியாவுக்கான மிஸ் இந்தியாவாகத் தேர்வானது நினைத்துப் பார்க்காத கனவு என்கிறார்.அதைத் தொடர்ந்து மாடலிங்கில் இறங்கிவிட்ட விமலாவுக்கு கமலிடம் இருந்து நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாகநடிக்க அழைப்பு வந்ததாம். ஆனால், சினிமா என்றாலே கசமுசா உலகம் என்று அச்சம் ஏற்பட்டதால் வேண்டாம் என இவர்மறுத்துவிடவே அந்த வாய்ப்பு மலையாளத்து கீது மோகன்தாசுக்குப் போனதாம். ஆனாலும் இவரை விடாத கமல் தெனாலி படத்திலும் ஜோதிகா ரோலுக்குக் கூப்பிட்டாராம். அதையும் இவர் ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆனால், இப்போது பொய் மூலம் கிளாமர் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்ட விமலா ராமன்தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறார்.இதனால் பிரஷாந்துடன் நடிக்க ஓ..கே சொல்லிவிட்டார்.ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமோ?

    By Staff
    |
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமலா ராமனுக்கு கோலிவுட் நிரந்தரமாக கதவைத் திறந்துவிடத் தயாராகி வருகிறது.

    சிட்னியில் பிறந்து வளர்ந்த இந்தத் தமிழ்ப் பெண் அந்த ஊரில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். அதைத் தொடர்ந்துஆஸ்திரேலியாவில் பல அழகிப் போட்டிகளில் பங்கேற்றவர் பின்னர் மும்பைக்கு வந்தார்.

    இந்தியாவின் சார்பில் மிஸ் வோல்ர்ட் போட்டியில் பங்கேற்ற விமலா ராமனுக்கு மிஸ் போட்டேஜெனிக் பட்டமே மிஞ்சியது.இதையடுத்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டவரை கே.பாலசந்தர் தனது தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

    தனது குரு கே.பிக்காக நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் பொய் படத்தில் இவர் தான் நாயகி.

    இந்தப் படத்துக்காக புதிதாக ஒரு பிரஷ் முகத்தைத் தேடிய கே.பிக்கு விமலா ராமன் குறித்து கமல்ஹாசன் எடுத்துச் சொல்ல,நேரடியாக சிட்னிக்கு ஒரு போன் போட்டு வரச் சொன்னாராம். படபடப்பாக சென்னைக்கு வந்திறங்கி மயிலாப்பூரில் உள்ளகவிதாலயா ஆபிசுக்கு ஓடிப் போய் கே.பாலசந்தரைப் பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி.

    என்ன, ஏது என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் எனது அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின், ரெடியாகிடு என்றுசொல்லிவிட்டாராம்.

    பொய் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விமலா ராமன் கொஞ்சம் கோடம்பாக்கத்தில் வெயிட் பண்ணிப் பார்த்தார்.அடுத்ததாக யாரும் வராததால் சான்ஸ் பிடிக்கும் வேலை என்றெல்லாம் அலையாமல் சிட்னிக்கே போய்விட்டார்.

    இப்போது அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர்பிரஷாந்த். தனது படத்தில் இவரை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளாராம்.

    கோவை தான் விமலா ராமனின் சொந்த ஊராம். இவரது அப்பா பட்டாபிராமன் 30 வருடமாக ஆஸ்திரேலியாவிலேயே செட்டில்ஆகிவிட்டதால் அந்த ஊர்ப் பெண்ணாகிவிட்டார். ஆனாலும் அட்சரம் பிசகாமல் மிக அழகாகத் தமிழ்ப் பேசுகிறார். கூடவே பரதநாட்டியத்திலும் எக்ஸ்பர்ட்.

    ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனம் ஒன்றில்வேலைக்குப் போக இருந்தபோது, அழகிப் போட்டியில் சும்மா பங்கேற்றாராம்.

    ஆஸ்திரேலியாவுக்கான மிஸ் இந்தியாவாகத் தேர்வானது நினைத்துப் பார்க்காத கனவு என்கிறார்.

    அதைத் தொடர்ந்து மாடலிங்கில் இறங்கிவிட்ட விமலாவுக்கு கமலிடம் இருந்து நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாகநடிக்க அழைப்பு வந்ததாம். ஆனால், சினிமா என்றாலே கசமுசா உலகம் என்று அச்சம் ஏற்பட்டதால் வேண்டாம் என இவர்மறுத்துவிடவே அந்த வாய்ப்பு மலையாளத்து கீது மோகன்தாசுக்குப் போனதாம்.

    ஆனாலும் இவரை விடாத கமல் தெனாலி படத்திலும் ஜோதிகா ரோலுக்குக் கூப்பிட்டாராம். அதையும் இவர் ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆனால், இப்போது பொய் மூலம் கிளாமர் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்துவிட்ட விமலா ராமன்தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறார்.

    இதனால் பிரஷாந்துடன் நடிக்க ஓ..கே சொல்லிவிட்டார்.

    ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமோ?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X