விமலா ராமன்- எஸ்.ஜே. சூர்யா பிரகாஷ் ராஜ் தயாரிப்பில், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பொய் படத்தின் நாயகி விமலா ராமன், முதல் படம்வெளியாவதற்கு முன்பே 3 படங்களில் புக் ஆகி விட்டார்.கே.பியின் நூறாவது படம் பொய். இப் படத்தில் ஆஸ்திரேலிய தமிழச்சி விமலா ராமன் நடித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில்பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழையும், தமிழர் கலாச்சாரத்தையும் அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து வருகிறாராம் விமலா.பொய் படப்பிடிப்பின்போது அவர் பேசிய சுத்தத் தமிழைக் கண்டு யூனிட்டே அசந்து போய் விட்டதாம். பொய் படம் அவருக்குதமிழ் சினிமாவில் அருமையான ஒரு முகவரியைத் தேடித் தரும் என்கிறார்கள். பொய் படம் இன்னும் வெளிவராத நிலையில் விமலா ராமனைத் தேடி இன்னொரு தமிழ்ப் பட வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது.அந்தப் படத்தின் பெயர் திருமகன். இதில் விமலா ராமனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் எஸ்.ஜே. சூர்யா.எஸ்.ஜே.சூர்யா படமாச்சே, விமலா ராமன் எப்படி அவருக்கு ஈடு கொடுப்பார் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் இது டிப்பிக்கல்எஸ்.ஜே. சூர்யா படமாக இருக்காதாம். அவரது இமேஜை டோட்டலாக மாற்றிக் காட்டும் சைவப் படமாக அமையுமாம்.இப்படத்திற்காக சமீபத்தில் விமலா ராமன் சென்னைக்கு வந்து மேக்கப் டெஸ்ட்டில் கலந்து கொண்டாராம். அதில் ஓ.கே. ஆனதால்படத்தில் புக் ஆகி விட்டார். கிராமத்துப் பின்னணியில் இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். அதற்கு தமிழ் நன்கு பேசத் தெரிந்த, அச்சு அசல்தமிழச்சியை ஹீரோயினாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் ரத்னகுமார்நிநனைத்தபோது அவரது பார்வையில்வந்து போனவர் விமலா ராமன்.கதையைக் கேட்ட விமலா முதலில் எனக்கு கிராமத்து வேடம் பொருத்தமாக அமையுமா என்பதை பார்த்து விட்டு முடிவெடுங்கள்என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்தே மேக்கப் டெஸ்ட் நடந்ததாம்.இப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கப் போகிறார். விமலா ராமன் தவிர மேலும் இரண்டுநாயகிகளும் படத்தில் இருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் புதுமுகங்களாம். ஆனால் விமலா ராமனுக்கே கதையில்முக்கியத்துவம். இப்படம் சூர்யாவால் அப்படித்தான் நடிக்க முடியும் என்ற இமேஜை உடைக்கும் என்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.தமிழில் இந்தப் படம் தவிர பிராஷாந்துடன் ஒரு படம் புக் ஆகிவிட்டது விமலா ராமனுக்கு. அதே போல தெலுங்கில் இருந்தும்விமலா ராமனுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. தெலுங்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.இதனால் இப்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அப்பாவுடன் வந்துதங்கிவிட்டார் இந்த ஆஸ்திரேலியப் பறவை.

By Staff
பிரகாஷ் ராஜ் தயாரிப்பில், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பொய் படத்தின் நாயகி விமலா ராமன், முதல் படம்வெளியாவதற்கு முன்பே 3 படங்களில் புக் ஆகி விட்டார்.

கே.பியின் நூறாவது படம் பொய். இப் படத்தில் ஆஸ்திரேலிய தமிழச்சி விமலா ராமன் நடித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில்பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழையும், தமிழர் கலாச்சாரத்தையும் அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து வருகிறாராம் விமலா.

பொய் படப்பிடிப்பின்போது அவர் பேசிய சுத்தத் தமிழைக் கண்டு யூனிட்டே அசந்து போய் விட்டதாம். பொய் படம் அவருக்குதமிழ் சினிமாவில் அருமையான ஒரு முகவரியைத் தேடித் தரும் என்கிறார்கள்.

பொய் படம் இன்னும் வெளிவராத நிலையில் விமலா ராமனைத் தேடி இன்னொரு தமிழ்ப் பட வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது.அந்தப் படத்தின் பெயர் திருமகன். இதில் விமலா ராமனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் எஸ்.ஜே. சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா படமாச்சே, விமலா ராமன் எப்படி அவருக்கு ஈடு கொடுப்பார் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் இது டிப்பிக்கல்எஸ்.ஜே. சூர்யா படமாக இருக்காதாம். அவரது இமேஜை டோட்டலாக மாற்றிக் காட்டும் சைவப் படமாக அமையுமாம்.

இப்படத்திற்காக சமீபத்தில் விமலா ராமன் சென்னைக்கு வந்து மேக்கப் டெஸ்ட்டில் கலந்து கொண்டாராம். அதில் ஓ.கே. ஆனதால்படத்தில் புக் ஆகி விட்டார்.

கிராமத்துப் பின்னணியில் இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். அதற்கு தமிழ் நன்கு பேசத் தெரிந்த, அச்சு அசல்தமிழச்சியை ஹீரோயினாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் ரத்னகுமார்நிநனைத்தபோது அவரது பார்வையில்வந்து போனவர் விமலா ராமன்.

கதையைக் கேட்ட விமலா முதலில் எனக்கு கிராமத்து வேடம் பொருத்தமாக அமையுமா என்பதை பார்த்து விட்டு முடிவெடுங்கள்என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்தே மேக்கப் டெஸ்ட் நடந்ததாம்.

இப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கப் போகிறார். விமலா ராமன் தவிர மேலும் இரண்டுநாயகிகளும் படத்தில் இருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் புதுமுகங்களாம். ஆனால் விமலா ராமனுக்கே கதையில்முக்கியத்துவம்.

இப்படம் சூர்யாவால் அப்படித்தான் நடிக்க முடியும் என்ற இமேஜை உடைக்கும் என்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

தமிழில் இந்தப் படம் தவிர பிராஷாந்துடன் ஒரு படம் புக் ஆகிவிட்டது விமலா ராமனுக்கு. அதே போல தெலுங்கில் இருந்தும்விமலா ராமனுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. தெலுங்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

இதனால் இப்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அப்பாவுடன் வந்துதங்கிவிட்டார் இந்த ஆஸ்திரேலியப் பறவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X