விந்தியாவின் சுய சரிதை
பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டோடு ஓய்ந்து கிடக்கும் விந்தியா, தனது சுய சரிதையை எழுதி வருகிறாராம்.
| Click here for more images |
சங்கமம் நாயகி விந்தியா, இப்போது பட வாய்ப்பு அறவே இல்லாமல் சுத்தமாக வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும் விந்தியாவுக்கு கதவு அடைக்கப்பட்டு விட்டது.
இடையில் அரசியலிலும் புகுந்து அலசிப் பார்த்தார். அப்படியும் தேற முடியாமல் போனதால், சங்கவியுடன் கை கோர்த்து படத் தயாரிப்பில் குதிக்க யோசித்தார். ஆனால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை.
இந்த நிலையில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்காமல், உருப்படியான ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறாராம் விந்தியா. அதாவது தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை நடந்த சுவாரஸ்யங்கங்களை தொகுத்து சுயசரிதையை வடித்து வருகிறாராம்.
மை லைப் என்று இந்த நூலுக்குப் பெயரிட்டுள்ள விந்தியா, நூலை எழுதி முடித்தவுடன் ரிலீஸ் செய்யப் போகிறார்.
விந்தியாவின் சரிதை சொல்லப் போகும் சேதி என்னவோ?
Comments


Click it and Unblock the Notifications