»   »  உகேவ்.. வகேவ் விந்தியா!

உகேவ்.. வகேவ் விந்தியா!

Subscribe to Oneindia Tamil
விந்தியா அடுத்ததாக என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக அவதாரம் எடுக்கப் போகிறாராம்.

விந்தியாவின் அழகு நிலையம் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், ரிலீஸ் ஆவதில் சிக்கல்.

மேலும் புக் ஆன சில படங்களும் பூஜையோடு நிற்கின்றன. தேர்தலோடு அரசியல் வேலையும் முடிந்துவிட்டது.உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய அழைத்தால் போக வேண்டியிருக்கும்.அதுவரை விந்தியா ப்ரீ தான்.

பெரிய அளவில் வாய்ப்புக்கள் இல்லாமல் தடுமாறி வரும் விந்தியாவுக்கு அபயக்கரம் நீட்டியுள்ளார் விஜய்யின்அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரா (நியூமராலஜிப்படி பெயரில் கடைசி எழுத்தான ன்-னை தூக்கிவிட்டார்).

பூஜா-நரேன் ஜோடியை வைத்து இவர் இயக்கப் போகும் படத்தில் விந்தியாவைப் பிடித்துப் போட்டுள்ளார்.இதில் என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடமாம் விந்தியாவுக்கு.

அழகு நிலையம் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயினாக உருமாறிவிட்டார் விந்தியா. இதற்காக ஸ்டண்ட் மாஸ்டர்பாண்டியனிடம் கராத்தே, குங்பூ கற்று வந்தார். இன்னும் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்விந்தியாவை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பார்க்கலாம்.

உம்.. வா.. உகேவ்.. வகேவ் என்ற பல குரல்களில் விந்தியா அங்கு பயிற்சியில் பின்னி எடுத்து வருகிறார்.

இந் நிலையில் போலீஸ் அதிகாரி, அதிலும் என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடம் தன்னைத் தேடிவந்துவிட்டதால் படு சிரத்தையுடன் பயிற்சி எடுக்கிறார் விந்தியா.

அழகு நிலையம் படத்தில் ஒரு காட்சியில் அவரது வீடு தீப்பிடித்து எரிவது போன்ற காட்சி. அதில் ஸ்டண்ட்மாஸ்டர் ஆக்ஷன் பிரகாஷ், டூப் போட்டுவிடலாம் மேடம் என்று சொல்லியும் கேட்காமல் தானே தீக்குள் புகுந்துவெளியே வந்தாராம் விந்தியா. எல்லாம் தற்காப்புக் கலை தந்த தைரியம் தான் காரணமாம்.

கராத்தே-குங்பூ தவிர கேரளத்தில் களறியாட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றையும் கற்று வருகிறார் விந்தியா.

விட்டால் டபிள்யூ.டபிள்யூ.எப் சேனலில் தோன்றிவிடுவார் போலிருக்கிறது இந்த விஜய்சாந்தி.. ஸாரி விந்தியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil