»   »  எண்கெளன்டர் விந்தியா!

எண்கெளன்டர் விந்தியா!

Subscribe to Oneindia Tamil

ஆக்ஷன் ஹீரோயினாக விந்தியா அசத்தும் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்றபடம் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

குடும்ப குத்து விளக்காக சங்கமத்தில் அறிமுகமான விந்தியா, இப்போது என்னமாதிரியான ரோலில் நடிப்பது என தெரியாமல் ரொம்பவே குழம்பிப் போய்க்கிடக்கிறார். இடையில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். அப்புறம் திடீரெனஅரசியலில் குதித்தார்.

இடையில் கற்பழிப்பு முயற்சி என புகார்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்படியேஅதிரடி நாயகியாகவும் அழகு நிலையம் என்ற படத்தில் நடித்தார்.

இப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சாங்கூட்டில் நீயேநிற்கிறாய் என்ற படத்தில் அதிரடிஆக்ஷன் ஹீரோயினாக அட்டகாசம் செய்துவருகிறார். இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார் விந்தியா.

ஏற்கனவே விந்தியாவுக்கு கராத்தே, களறி என ஏகப்பட்ட தற்காப்புக் கலைகள்தெரியும். இப்போது நெஞ்சாங்கூட்டுக்காக துப்பாக்கி சுடுவதிலும் பயிற்சிஎடுக்கவுள்ளாராம். இதற்காக நல்ல பயிற்சியாளரை தேடி வருகிறாராம்.

ரைபிள், பிஸ்டல்கள், ஏ.கே.47 போன்ற துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது, குறிபார்த்து சுடுவது என இத்யாதி, இத்யாதிகளை கற்றுக் கொள்ளப் போகிறாராம்.

இதேபோல கட்டழகி மும்தாஜும், ஒரு படத்தில் அதிரடி நாயகியாக அடித்து துவம்சம்செய்து வருகிறாராம். ஒரே நேரத்தில் பல வில்லன்களை புரட்டிப் புரட்டிஎடுப்பதுபோல ஒருகாட்சியை இப்படத்திறகாக சமீபத்தில் சுட்டார்களாம்.

இந்தப் படத்தில் மும்தாஜும் என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார்.

இதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் வளாகத்தில் உள்ள துப்பாக்கிசுடும் கிளப்பிற்குப் போய் எப்படி சுடுவது என்பது குறித்து பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.

கிளாமர் நாயகிகள் இப்படி கன்-பைட்-காஞ்சனாக்களாக நடிக்கும் படங்களில் ஒருசந்தோஷமான விஷயமும் இருக்கும்.

சிஐடி சகுந்தலா மாதிரி கன் பைட்டோடு,கிளாமர் பைட்டும் தூள் கிளப்பும் என்பதால்இப்படிப்பட்ட படங்களுக்கு ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக ஆதரவுகொடுப்பார்கள். எனவே இந்தப் படங்களுக்கும் நம்மவர்கள் நிச்சயம் ஆதரவுதருவார்கள் என தயாரிப்பு பார்ட்டிகள் நம்பிக்கையோடு உள்ளன.

Please Wait while comments are loading...