»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விந்தியா படு கலக்கல் கவர்ச்சி காட்டி வரும் வயசு பசங்க, அதன் தயாரிப்பாளரே எதிர்பார்க்காத விலைக்குவிற்பனையாகியுள்ளதாம்.

படத்தை ஆரம்பிக்கும் முன்பே வயசுப் பசங்களுக்காக போட்டோ செஷன் நடத்திய இயக்குனர் பாரதிக்கண்ணன்,விந்தியாவை வைத்து பலான ரேஞ்சில் படங்கள் எடுத்து விட்டார்.

அப்போதே ஏகப்பட்ட வினியோகஸ்தர்கள்காசைக் கொண்டு வந்து கொட்டிவிட்டுச் சென்றனர்.

பின்னர் படப் பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில் அதில் விந்தியா காட்டி வரும் கவர்ச்சியை ஸ்டில்களாகதயாரிப்பாளர் தரப்பில் வெளியிட்டுக் கொண்டே இருக்க, அதைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளரைமொய்த்துவிட்டனராம் வினியோகஸ்தர்கள். இதையடுத்து படம் பெரும் விலைக்கு (பல கோடிகளுக்கு)விற்கப்பட்டுவிட்டதாம்.

படத்தை ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான செலவில் எடுத்து வரும் தயாரிப்பாளர், விந்தியாவின் கவர்ச்சி மழைகொண்டு வந்து சேர்ந்த பண வெள்ளத்தில் மூழ்கிப் போய், சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil