»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஒரு ரவுண்டு வரப் போகிறார் விந்தியா.

ஹீரோயினாக வந்து பின்னர் சிங்கிள் கவர்ச்சி டான்சுக்கு தாவி, அந்த சான்சும் இல்லாமல் போய், சமீபத்தில்விபச்சார வழக்கில் சிக்கப் போவதாக பரபரப்புக்கு உள்ளான விந்தியாவுக்கு ஒரு வழியாய் மீண்டும் ஒரு படசான்ஸ் கிடைத்துள்ளது.

படத்தின் பெயர் வயசு பசங்க. இதில் விந்தியாவுக்கு மிக கிக்கான ரோல். தன்னை விட வயதில் குறைந்தவிடலைப் பசங்களிடம் போய் வழியும் கேரக்டராம்.

இதில் 2 புதுமுக வாலிபர்கள் அறிமுகமாகிறார்கள். தங்களைவிட வயதான விந்தியாவின் மீது இந்த இருவரும்காதல் கொள்ள அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதையாம்.

விந்தியாவின் கவர்ச்சி போதாது என்று ராதிகா செளத்ரியையும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வைக்கப்போகிறாராம் இயக்குனர் பாரதி கண்ணன். இது தவிர பாயல், லில்லி என இரு மும்பை புதுமுகங்களும்அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கு வேலையும் கவர்ச்சி காட்டுவது தானாம்.

இந்த ரோலை விந்தியா நன்றாகவே செய்வார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil