»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாளவிகா அடிக்கடி வந்து சந்தித்து டார்ச்சர் கொடுத்ததால் பிதாமகன் படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார்இயக்குனர் பாலா. பின்னர் அவரது ரோல் ஒரே ஒரு பாட்டுக்கு டான்ஸ் என்று சுருக்கப்பட்டது. ஆனால், இதன்பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை, மாளவிகாவை படத்தில் இருந்து தூக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

அவருக்குப் பதிலாக ஒரு பாட்டுக்கு ஆடிக் கலக்கப் போவது, வேறு யாருமல்ல ஜென்டில்மென், நம்ம சிம்ரன் தான்.

இது ஒரு பக்கம் இருக்க மாளவிகாவுக்கும் விந்தியாவுக்கும் இடையே சான்ஸ் பிடிப்பதில் ஒரே சண்டை.பிதாமகனில் ஒரு பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்ட கையோடு, அதைச் சொல்லியே சில தயாரிப்பாளர்களைச்சந்தித்து சான்ஸ் கேட்டு வந்தார் மாளவிகா.

ஆனால், மாளவிகா போய் நின்ற இடங்களில் எல்லாம் விந்தியாவும் அவரது மேனேஜரும் (இருவரும் சேர்ந்துவசிக்கின்றனர். கேட்டால் மேனேஜர் என்கிறார் விந்தியா) வந்து நிற்க இரு தரப்பினரும் அக்னி நட்சத்திர பார்வைபார்த்துக் கொண்டார்களாம்.

இப்போது மாளவிகா எங்கு சென்று சான்ஸ் கேட்கிறாரோ அங்கெல்லாம் போய் தயாரிப்பாளர்களை மடக்குவதைவிந்தியா கடமையாக வைத்துள்ளார். அதே போல விந்தியாவுக்கு சான்ஸ் தரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,இளம் நடிகர்களை மயக்குவதில் மாளவிகாவும் களம் இறங்கியுள்ளார். இதில் சில இடங்களில் வெற்றியும்கண்டுவிட்டார்.

இதையடுத்து தனக்கு சான்ஸ் பிடிக்க ஒரு மேனேஜர்-கம்- பி.ஆர்.ஓவை நியமித்துவிட்டார் மாளவிகா.பெங்களூரில் இருந்து அடிக்கடி சென்னை வரும் மாளவிகா, சினிமா வட்டாரத்தில் முடிந்தவரை எல்லோரையும்பார்த்து தனது டிரேட் மார்க் கவர்ச்சியால் சுண்டி இழுத்து வருகிறார். மேலும் அவர்களிடம் தான் நடித்து வரும்ஆங்கில சாப்ட்- போர்ன் படம் குறித்தும் பேசி ஜொள்ளு விட வைக்கிறாராம்.

ஹீரோயின் சான்ஸ் போய்விட்ட நிலையில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிப் பிழைத்துக் கொண்டிருக்கும்விந்தியாவின் வாழ்க்கையில் விளையாட வந்துவிட்டார் மாளவிகா என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil