»   »  விந்தியாவின் "விபரீத ஆசை புது வரவுகளுக்குப் போட்டியாக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார் நடிகை விந்தியா.சங்கமம் படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை விந்தியா. அந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின்பாடல்களைப் போலவே விந்தியாவும் பரபரப்பாகத் தான் பேசப்பட்டார். இதனால் சில வாய்ப்புகளும் கிடைத்தன.இந் நிலையில் தனது மேனேஜருடன் கிசுகிசு, அதன் மூலம் குடும்பத்தில் குழப்பம் என அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கித்தவித்தார் விந்தியா. இது ஒரு புறமிருக்க வாய்ப்புகளும் மெல்ல குறையத் தொடங்கின.இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அதிரடி கவர்ச்சியில் களமிறங்கினார். இதனால் சில வாய்ப்புகள் கிடைத்தன.கடைசியாக திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கண்ணம்மாவில் வில்லியாகவும் விந்தியா கலக்கினார்.ஆனாலும் கோலிவுட்டில் தினமும் வந்து குவியும் மும்பை குஜிலிகள் மற்றும் கேரளத்துக் குட்டிகளின் முன்னால் விந்தியாவால்தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தனது கவர்ச்சியின் அளவை மேலும் கூட்ட முடிவு செய்து விட்டார்.தற்போது நடித்து வரும் அழகு நிலையம் என்ற படத்தில் விந்தியா எல்லையில்லா கவர்ச்சியை அள்ளி தெளித்துள்ளாராம்.இப்படத்தின் துவக்க விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது.உடனடியாக அங்கு ஆஜரானோம். விந்தியாவை தேடினோம். ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவரை அப்படியே மடக்கிப்பிடித்து என்ன, இந்தப் படத்தில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே என்றோம்.கேள்வியைக் கேட்டதும் சீறி விழுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ரொம்ப கேஷுவலாகவே பதில் சொன்னார் விந்தியா.இப்போது வரும் புதுமுகங்கள் முதல் படத்திலேய மிகவும் கவர்ச்சி காட்டி நடிக்கின்றனர்.நான் அவர்களோடு போட்டி போட்டாக வேண்டுமே. இதனால் நானும் கவர்ச்சிக் களத்தில் குதித்து விட்டேன். ஆனால்தனிப்பட்ட முறையில் நான் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. நானும் பல படங்களில் இழுத்துப் போர்த்தி விட்டு குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருக்கிறேன்.ஆனால் ஒரு நடிகை எத்தனை நாளைக்குத் தான் இப்படியே நடித்துக் கொண்டிருக்க முடியும். அதனால் தான் இந்தப் படத்தில்கவர்ச்சியாக நடிக்கிறேன். வெறும் கவர்ச்சியாக மட்டும் தான் நடிக்கிறேன் என்று நினைத்து விடாதீகர்கள்.அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடிக்கிறேனாக்கும். இதற்காக கடுமையான சண்டைப் பயிற்சியையும் எடுத்து வருகிறேன். ஒருஸ்டண்ட் மாஸ்டரிடம் சிலம்பு பயிற்சியும் பெற்று வருகிறேன்.நாயகன்களுக்கு இணையாக நாயகியும் சண்டைக் காட்சிகளில் கலக்க முடியும் என்று நிரூபித்த விஜயசாந்தி தான் எனது மானசீககுரு. அவர் வழியில் தான் இப்போது நான் செல்லத் தொடங்கியிருக்கிறேன் என்ற விந்தியாவிடம், அய்யய்யோ...அப்படியென்றால் நீங்களும் விஜயசாந்தியைப் போல விரைவில் அரசியலில் குதித்து விடுவீர்களா என்றோம்.விஜயசாந்தியைப் போல நடிப்பதால் நானும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. ஆனால் அந்தஎண்ணம் இப்போதைக்குத் தான் இல்லை. நான் முதலில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். அதன் பிறகு அரசியலைப் பற்றி யோசிக்கலாம் என்ற மிக தெளிவாக பேசியவிந்தியாவிடம், அப்போ கல்யாணம்... என்று இழுத்தோம். முதலில் சினிமாவிலும் பிறகு அரசியலிலும் ஜெயித்த பிறகு தான் கல்யாணம், காட்சியெல்லாம் என்ற படியே இடத்தைக் காலிசெய்தார் விந்தியா.அப்ப தமிழ்நாட்டில் இன்னொரு ஆக்ஷன்ஹீரோயின் ரெடி!

விந்தியாவின் "விபரீத ஆசை புது வரவுகளுக்குப் போட்டியாக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார் நடிகை விந்தியா.சங்கமம் படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை விந்தியா. அந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின்பாடல்களைப் போலவே விந்தியாவும் பரபரப்பாகத் தான் பேசப்பட்டார். இதனால் சில வாய்ப்புகளும் கிடைத்தன.இந் நிலையில் தனது மேனேஜருடன் கிசுகிசு, அதன் மூலம் குடும்பத்தில் குழப்பம் என அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கித்தவித்தார் விந்தியா. இது ஒரு புறமிருக்க வாய்ப்புகளும் மெல்ல குறையத் தொடங்கின.இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அதிரடி கவர்ச்சியில் களமிறங்கினார். இதனால் சில வாய்ப்புகள் கிடைத்தன.கடைசியாக திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கண்ணம்மாவில் வில்லியாகவும் விந்தியா கலக்கினார்.ஆனாலும் கோலிவுட்டில் தினமும் வந்து குவியும் மும்பை குஜிலிகள் மற்றும் கேரளத்துக் குட்டிகளின் முன்னால் விந்தியாவால்தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தனது கவர்ச்சியின் அளவை மேலும் கூட்ட முடிவு செய்து விட்டார்.தற்போது நடித்து வரும் அழகு நிலையம் என்ற படத்தில் விந்தியா எல்லையில்லா கவர்ச்சியை அள்ளி தெளித்துள்ளாராம்.இப்படத்தின் துவக்க விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது.உடனடியாக அங்கு ஆஜரானோம். விந்தியாவை தேடினோம். ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவரை அப்படியே மடக்கிப்பிடித்து என்ன, இந்தப் படத்தில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே என்றோம்.கேள்வியைக் கேட்டதும் சீறி விழுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ரொம்ப கேஷுவலாகவே பதில் சொன்னார் விந்தியா.இப்போது வரும் புதுமுகங்கள் முதல் படத்திலேய மிகவும் கவர்ச்சி காட்டி நடிக்கின்றனர்.நான் அவர்களோடு போட்டி போட்டாக வேண்டுமே. இதனால் நானும் கவர்ச்சிக் களத்தில் குதித்து விட்டேன். ஆனால்தனிப்பட்ட முறையில் நான் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. நானும் பல படங்களில் இழுத்துப் போர்த்தி விட்டு குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருக்கிறேன்.ஆனால் ஒரு நடிகை எத்தனை நாளைக்குத் தான் இப்படியே நடித்துக் கொண்டிருக்க முடியும். அதனால் தான் இந்தப் படத்தில்கவர்ச்சியாக நடிக்கிறேன். வெறும் கவர்ச்சியாக மட்டும் தான் நடிக்கிறேன் என்று நினைத்து விடாதீகர்கள்.அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடிக்கிறேனாக்கும். இதற்காக கடுமையான சண்டைப் பயிற்சியையும் எடுத்து வருகிறேன். ஒருஸ்டண்ட் மாஸ்டரிடம் சிலம்பு பயிற்சியும் பெற்று வருகிறேன்.நாயகன்களுக்கு இணையாக நாயகியும் சண்டைக் காட்சிகளில் கலக்க முடியும் என்று நிரூபித்த விஜயசாந்தி தான் எனது மானசீககுரு. அவர் வழியில் தான் இப்போது நான் செல்லத் தொடங்கியிருக்கிறேன் என்ற விந்தியாவிடம், அய்யய்யோ...அப்படியென்றால் நீங்களும் விஜயசாந்தியைப் போல விரைவில் அரசியலில் குதித்து விடுவீர்களா என்றோம்.விஜயசாந்தியைப் போல நடிப்பதால் நானும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. ஆனால் அந்தஎண்ணம் இப்போதைக்குத் தான் இல்லை. நான் முதலில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். அதன் பிறகு அரசியலைப் பற்றி யோசிக்கலாம் என்ற மிக தெளிவாக பேசியவிந்தியாவிடம், அப்போ கல்யாணம்... என்று இழுத்தோம். முதலில் சினிமாவிலும் பிறகு அரசியலிலும் ஜெயித்த பிறகு தான் கல்யாணம், காட்சியெல்லாம் என்ற படியே இடத்தைக் காலிசெய்தார் விந்தியா.அப்ப தமிழ்நாட்டில் இன்னொரு ஆக்ஷன்ஹீரோயின் ரெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புது வரவுகளுக்குப் போட்டியாக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார் நடிகை விந்தியா.

சங்கமம் படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை விந்தியா. அந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின்பாடல்களைப் போலவே விந்தியாவும் பரபரப்பாகத் தான் பேசப்பட்டார். இதனால் சில வாய்ப்புகளும் கிடைத்தன.

இந் நிலையில் தனது மேனேஜருடன் கிசுகிசு, அதன் மூலம் குடும்பத்தில் குழப்பம் என அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கித்தவித்தார் விந்தியா. இது ஒரு புறமிருக்க வாய்ப்புகளும் மெல்ல குறையத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அதிரடி கவர்ச்சியில் களமிறங்கினார். இதனால் சில வாய்ப்புகள் கிடைத்தன.கடைசியாக திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கண்ணம்மாவில் வில்லியாகவும் விந்தியா கலக்கினார்.

ஆனாலும் கோலிவுட்டில் தினமும் வந்து குவியும் மும்பை குஜிலிகள் மற்றும் கேரளத்துக் குட்டிகளின் முன்னால் விந்தியாவால்தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தனது கவர்ச்சியின் அளவை மேலும் கூட்ட முடிவு செய்து விட்டார்.

தற்போது நடித்து வரும் அழகு நிலையம் என்ற படத்தில் விந்தியா எல்லையில்லா கவர்ச்சியை அள்ளி தெளித்துள்ளாராம்.இப்படத்தின் துவக்க விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது.

உடனடியாக அங்கு ஆஜரானோம். விந்தியாவை தேடினோம். ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவரை அப்படியே மடக்கிப்பிடித்து என்ன, இந்தப் படத்தில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே என்றோம்.

கேள்வியைக் கேட்டதும் சீறி விழுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் ரொம்ப கேஷுவலாகவே பதில் சொன்னார் விந்தியா.இப்போது வரும் புதுமுகங்கள் முதல் படத்திலேய மிகவும் கவர்ச்சி காட்டி நடிக்கின்றனர்.


நான் அவர்களோடு போட்டி போட்டாக வேண்டுமே. இதனால் நானும் கவர்ச்சிக் களத்தில் குதித்து விட்டேன். ஆனால்தனிப்பட்ட முறையில் நான் யாரையும் போட்டியாகக் கருதவில்லை.

நானும் பல படங்களில் இழுத்துப் போர்த்தி விட்டு குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு நடிகை எத்தனை நாளைக்குத் தான் இப்படியே நடித்துக் கொண்டிருக்க முடியும். அதனால் தான் இந்தப் படத்தில்கவர்ச்சியாக நடிக்கிறேன். வெறும் கவர்ச்சியாக மட்டும் தான் நடிக்கிறேன் என்று நினைத்து விடாதீகர்கள்.

அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடிக்கிறேனாக்கும். இதற்காக கடுமையான சண்டைப் பயிற்சியையும் எடுத்து வருகிறேன். ஒருஸ்டண்ட் மாஸ்டரிடம் சிலம்பு பயிற்சியும் பெற்று வருகிறேன்.

நாயகன்களுக்கு இணையாக நாயகியும் சண்டைக் காட்சிகளில் கலக்க முடியும் என்று நிரூபித்த விஜயசாந்தி தான் எனது மானசீககுரு. அவர் வழியில் தான் இப்போது நான் செல்லத் தொடங்கியிருக்கிறேன் என்ற விந்தியாவிடம், அய்யய்யோ...அப்படியென்றால் நீங்களும் விஜயசாந்தியைப் போல விரைவில் அரசியலில் குதித்து விடுவீர்களா என்றோம்.

விஜயசாந்தியைப் போல நடிப்பதால் நானும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. ஆனால் அந்தஎண்ணம் இப்போதைக்குத் தான் இல்லை.

நான் முதலில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். அதன் பிறகு அரசியலைப் பற்றி யோசிக்கலாம் என்ற மிக தெளிவாக பேசியவிந்தியாவிடம், அப்போ கல்யாணம்... என்று இழுத்தோம்.

முதலில் சினிமாவிலும் பிறகு அரசியலிலும் ஜெயித்த பிறகு தான் கல்யாணம், காட்சியெல்லாம் என்ற படியே இடத்தைக் காலிசெய்தார் விந்தியா.

அப்ப தமிழ்நாட்டில் இன்னொரு ஆக்ஷன்ஹீரோயின் ரெடி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more