»   »  டிவிக்கு தாவுகிறார் விந்தியா!

டிவிக்கு தாவுகிறார் விந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்படி எப்படியோ தத்திங்கிணத்தோம் போட்டுப் பார்த்தும் கோலிவுட்டில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முடியாமல் தவிக்கும் விந்தியாவேறு வழியில்லாமல் சின்னத் திரைக்கு மாற முடிவு செய்து விட்டார்.

சங்கமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் பரபரப்பாக நுழைந்த ஆந்திர அழகுக் கிளி விந்தியா, கோலிவுட்டில் சின்னதாக ஒருரவுண்டும் வந்தார். குணச்சித்திர வேடங்களில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விந்தியா ஏமாற்றத்தையே கொடுத்தார்.

ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த அவர், பின்னர் விவேக்குடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். படவாய்ப்புகள் குறைந்ததால் ஒற்றைப் பாட்டுக்கு குட்டைப் பாவாடையுடன் ஆடிக் கலக்கவும் தயாரானார்.

ரெட் படத்தில் அஜீத்துடன் ஒற்றைப் பாட்டுக்கு ஆடி குத்தாட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். ம்ஹூம்.. அதுவும் சரிப்படவில்லை.இந்த நிலையில் தான் ஷூட்டிங்குக்குப் போன இடத்தில் தொழிலதிபர் ஒருவர் விந்தியாவைக் கெடுக்க முயன்றதாக சர்ச்சை கிளம்பிபரபரப்பை ஏற்படுத்தியது.

ஒற்றைப் பாட்டுகளுக்கு ஆடி வந்த விந்தியாவுக்கு அதிலும் பெரிய வாய்ப்பு வரவில்லை. அந்த சமயத்தில் தான் கருணாநிதியின் கதைவசனத்தில் உருவான கண்ணம்மாவில் வில்லியாக நடித்தார் விந்தியா. கேரக்டர் பேசப்பட்டாலும் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் வராததால்வெறுத்துப் போனார் விந்தியா.

இதனால் வீட்டோடு முடங்கிக் கிடந்த விந்தியாவுக்கு ஆறுதல் கொடுத்து அவரை வேறு ரூட்டில் போக வழி காட்டியுள்ளாராம் இயக்குநர்வசந்த். சினிமா இல்லாவிட்டால் என்ன, கொஞ்ச நாளைக்கு டிவியில் நடித்துக் கொண்டிரு.

உனக்கு அது ஒரு சேஞ்சாக இருக்கும் என்று கூறி ஆறுதல்படுத்திய வசந்த், அத்தோடு நில்லாமல், தனது குரு கே.பாலச்சந்தரின் நிறுவனமானமின் பிம்பங்கள் தயாரிக்கப் போகும் ஒரு மெகா தொடரில் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக் கொடுத்துள்ளாராம் வசந்த்.

எனவே, ரசிகப் பெருமக்களே! இத்தனை நாட்களாக பெரிய திரையில் கண்களுக்கு விருந்தளித்து வந்த விந்தியா, இனிமேல் சின்னத்திரையிலும் தோன்றி நம்மை குஷிப்படுத்தப் போகிறார்.

பெரிய திரையிலும் சாதித்து, சின்னத் திரையிலும் முத்திரை பதித்த சினிமா நடிகைகளின் எண்ணிக்கை அதிகம் இல்லை. குஷ்பு, ராதிகா,ஸ்ரீபிரியா, தேவயானி என சிலர் தான் டிவியிலும் வெற்றி பெற்றவர்கள். கெளதமி, சுகன்யா, கெளசல்யா என பலரும் தோல்வியைத்தழுவியுள்ளார்கள்.

இதில் விந்தியா எந்தப் பட்டியலில் சேரப் போகிறார் என்று தெரியவில்லை!

Read more about: vindhya turns to tv serials

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil