»   »  "ஜோவுக்கு வலைவீசும் தெலுங்கு, கன்னடம்

"ஜோவுக்கு வலைவீசும் தெலுங்கு, கன்னடம்

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி வெற்றி சூப்பர் ஸ்டார் உட்பட பலருக்கு மறுவாழ்வை அளித்துள்ளது. "லகலக ஜோதிகாவுக்கு தமிழ் தவிர தெலுங்கு,கன்னடத்திலும் நடிக்க அழைப்புகள் வந்துள்ளன.

சந்திரமுகி பல தமிழ்ப் படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது. படம் வெளியாகி 55 நாட்களிலேயே வசூல் ரூ. 50கோடியை தாண்டிவிட்டது. தமிழ் திரை வரலாற்றில் 50 நாட்களிலேயே 50 கோடி வசூலை இதுவரை எந்தப் படமும் வாரிக்குவித்ததில்லை.

பல அதிரடி நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்ற போதிலும் திருட்டு விசிடி இன்னும் புழக்கத்தில் தான் இருக்கிறது.ஆனாலும் சந்திரமுகியை தியேட்டரில் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது.

8வது வாரத்திலும் 80 சதவீதம் வரை இப்படத்தின் கலெக்ஷன் உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்கள் நிரம்பிவிடுகிறது. இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு விநியோகஸ்தர்களை புன்னகையுடன் பார்க்க முடிகிறது.படத்தை தயாரித்த சிவாஜி குடும்பத்தாரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சந்திரமுகியின் வெற்றி இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் பலருக்கு மறு வாழ்வை அளித்துள்ளது. டைரக்டர்பி.வாசுவின் வீட்டை நோக்கி படையெடுக்கும் தயாரிப்பாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடத் தயாரிப்பாளர்களும் வாசுவின் வீட்டை நோக்கி படையெடுத்துவருகின்றனர்.

சாதாரணமாக தமிழில் ஒரு படம் நன்றாக ஓடினால் அந்தப் படத்தில் நடித்தவர்களுக்கு தமிழில் தான் வாய்ப்புகள் குவியும்.ஆனால் சந்திரமுகியின் வெற்றியால் இப்படத்தில் நடித்த நாயகிகளான நயனதாரா, ஜோதிகா இருவருக்கும் வேற்று மொழிப்படங்களிலும் வாய்ப்புகள் குவிகிறது.

மலையாளத்தில் அவ்வளவாக வாய்ப்பில்லாமல் தான் நயனதாரா கோலிவுட் பக்கம் ஒதுங்கினார். ஆனால் இப்போதுசந்திரமுகியின் வெற்றியால் இவருக்கு மலையாளப் படங்களில் மீண்டும் வாய்ப்புகள் குவியத் தொடங்கி விட்டது.

இது மட்டுமல்லாமல் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நான் நடித்த படம் சூப்பர் ஹிட்டாக ஓடுகிறது. இதற்கு காரணம் நான்தான் என்று மலையாள சேட்டன்களிடம் புருடா வேறு விடுகிறாராம்.

அடுத்த நாயகி ஜோதிகாவுக்கு கன்னடத்தில் வரிசையாக 2 படங்கள் புக்காகி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் இதற்கு முன்பு 2கன்னடப் படங்களில் நடித்துள்ளார். அந்த இரண்டு படங்களுமே மண்ணைக் கவ்வின.

சந்திரமுகியின் வெற்றி பிளஸ் அதில் அவரது "லகலக நடிப்பு ஆகியவை தான் ஜோதிகாவுக்கு கன்னட வாய்ப்புகள் வரக் காரணம்.அதே போல தெலுங்கிலும் ஜோதிகாவுக்கு மீண்டும் அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil