பூட்டு போட்ட விந்தியா சொந்தப் படம் எடுக்கப் போகிறேன் என்று பப்பளபள பளபளபள ரேஞ்சுக்கு பேசி வந்த விந்தியா அந்த முடிவைத் தூக்கி கடாசி விட்டாராம். காரணம், பைனாஸ் பண்ண யாரும் முன் வரவில்லையாம். குடும்பக் குத்துவிளக்கு கணக்காக சங்கமம் படத்தில் அறிமுகமாகிய விந்தியா, ஸ்டார் நைட் லைட் கணக்காக மாறிப் போனது பழைய வரலாறு. குத்தாட்டம், குமுக்காட்டம், கமுக்காட்டம், அமுக்காட்டம் என பிசியான விந்தியாவுக்கு, எவ்வளவு கிளாமர் காட்டியும் பட வாய்ப்புகள் வந்து குமிந்து விடவில்லை. காத்திருந்து காத்திருந்து பார்த்த விந்தியா, இப்படியே இருந்தால் காலாவதியாகிப் போய் விடுவோம் எனப் பயந்து கிடைத்த ரோல்களில் எல்லாம் கலக்க ஆரம்பித்தார். அப்படியும் அம்மணிக்கு வாய்ப்புகள் வந்தபாடில்லை. இப்போது அவரது கைவசம் இருக்கும் ஓரிரு படங்களில் அழகு நிலையம் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துள்ளார் விந்தியா. இதில் கிளாமருடன், அடிதடி, அட்டாக் என விஜயசாந்தி ரேஞ்சுக்கு அதகளம் பண்ணியுள்ளாராம் விந்தியா. இடையில் இனிமேல் நடித்தால சொந்தப் படத்தில் மட்டும்தான், நானே படம் எடுப்பேன், நானே நடிப்பேன் என்று விலாவரியாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். அத்தோடு படத் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். புதிய படம் தொடர்பாக நெருக்கமானவர்களுடன் டீப்பாக டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்தார் விந்தியா. டைரக்டர், ஹீரோ ஆகும் ஆசையோடு (ஹீரோயின் விந்தியா தான்) வந்தவர்களுடன் இரவு பகலாக டீப் டிஸ்கசன் செய்தார் விந்தியா. சுமார் ரூ. 1 கோடிக்கு பட்ஜெட் போட்டுவிட்டு ஹீரோவாக மலையாளத்து பிருத்விராஜை போட முடிவெடுத்து அவரிடம் பேசினார். தம்பி ரூ. 25 லட்சம் கேட்கவே, கும்பிடு போட்டு அனுப்பிவிட்டு வேறு ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார். இந் நிலையில் படத்துக்கான பைனான்ஸ் தேடும் முயற்சிகளில் இறங்கினார். மன்னார்குடி மகா சக்தி வாய்ந்தவர்கள் மத்தியில் அலைந்து, திரிந்ததும் பைனான்சுக்குத் தானாம். நமக்கு என்றால் அள்ளித் தருவார் என்று நம்பியிருந்த விந்தியாவுக்கு அவர்களிடம் இருந்து, பாசிட்டிவ்வான பதில் வரவில்லை. சொந்தக் காசும் பெரிதாக இல்லாததால் விந்தியா குழம்பி நிற்க, இப்போ எதுக்கு சொந்தப் படம் என்று வேண்டியவர்கள் பயமுறுத்திவிட்டார்களாம். ரம்பாவைப் பார்த்தேளா? என்னாச்சு? ஒரே ஒரு படம் எடுத்தார், அத்தோடு அவர் காலி, கையில் இருந்த பணம் போச்சு, மார்க்கெட்டும் போச்சு, எல்லாம் போச்சு, கோர்ட்டுக்கு நடையாய் நடக்கிறார், உங்களுக்கு அந்த நிலை வர வேண்டுமா என்று கேட்டு விந்தியாவை விக்கித்து நிற்க வைத்துள்ளார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள். இதையெல்லாம் கேட்டு ரொம்பவே குழம்பிப் போயுள்ள விந்தியா, எதற்கு வம்பு, இப்போதைக்கு சொந்தப் படம் வேண்டாம், அப்புறம் பார்ப்போம், இப்போதைக்கு வர்ற வாய்ப்புகளை வாரிப் போட்டு முடிஞ்சவரை கஜானாவை நிரப்புவோம் என்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்துள்ளாராம். இதனால் விந்தியா ஆரம்பித்த படக் கம்பெனிக்கு திண்டுக்கல் பூட்டாகப் பார்த்து போட்டுவிட்டாராம். முடிந்தவரை சினிமா, சிங்கிள் பாட்டு, டிவி விளம்பரம், கடை திறப்பு, கலை நிகழ்ச்சி என சுற்றி வந்து பெட்டியை நிறைத்துக் கொண்டு அப்புறம் சொந்தமாக படம் எடுத்து ஹீரோயினாக மாறத் திட்டமிட்டுள்ளாராம். இப்போது நடித்து வரும் அழகு நிலையம் படத்தில் விந்தியாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமோ?. ஆண்களுக்கு செக்ஸ் ஆசையைத் தூண்டிவிட்டு, கட்டி உருண்டு, பின்னர் கொலை செய்வதாம். இதில் அழகேஸ்வரி என்ற கேரக்டரில் (புவனேஸ்வரி இல்லீங்கோ) பின்னி எடுத்து வருகிறாராம் விந்தியா. துணைக்கு சொர்ணமால்யாவாம். துணுக்கு: விந்தியாவுக்கு எல்லாமுமான அருண், ஜீவாவை வைத்து சொந்தமாக ஒரு படம் எடுக்கப் போகிறாராம். மேனேஜர் என்று கூறப்படும் இவருடன் தான் விந்தியா வசித்து வருகிறார்.

By Staff

சொந்தப் படம் எடுக்கப் போகிறேன் என்று பப்பளபள பளபளபள ரேஞ்சுக்கு பேசி வந்த விந்தியா அந்த முடிவைத் தூக்கி கடாசி விட்டாராம். காரணம், பைனாஸ் பண்ண யாரும் முன் வரவில்லையாம்.

குடும்பக் குத்துவிளக்கு கணக்காக சங்கமம் படத்தில் அறிமுகமாகிய விந்தியா, ஸ்டார் நைட் லைட் கணக்காக மாறிப் போனது பழைய வரலாறு. குத்தாட்டம், குமுக்காட்டம், கமுக்காட்டம், அமுக்காட்டம் என பிசியான விந்தியாவுக்கு, எவ்வளவு கிளாமர் காட்டியும் பட வாய்ப்புகள் வந்து குமிந்து விடவில்லை.

காத்திருந்து காத்திருந்து பார்த்த விந்தியா, இப்படியே இருந்தால் காலாவதியாகிப் போய் விடுவோம் எனப் பயந்து கிடைத்த ரோல்களில் எல்லாம் கலக்க ஆரம்பித்தார். அப்படியும் அம்மணிக்கு வாய்ப்புகள் வந்தபாடில்லை.

இப்போது அவரது கைவசம் இருக்கும் ஓரிரு படங்களில் அழகு நிலையம் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துள்ளார் விந்தியா. இதில் கிளாமருடன், அடிதடி, அட்டாக் என விஜயசாந்தி ரேஞ்சுக்கு அதகளம் பண்ணியுள்ளாராம் விந்தியா.

இடையில் இனிமேல் நடித்தால சொந்தப் படத்தில் மட்டும்தான், நானே படம் எடுப்பேன், நானே நடிப்பேன் என்று விலாவரியாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். அத்தோடு படத் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.


புதிய படம் தொடர்பாக நெருக்கமானவர்களுடன் டீப்பாக டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்தார் விந்தியா. டைரக்டர், ஹீரோ ஆகும் ஆசையோடு (ஹீரோயின் விந்தியா தான்) வந்தவர்களுடன் இரவு பகலாக டீப் டிஸ்கசன் செய்தார் விந்தியா.

சுமார் ரூ. 1 கோடிக்கு பட்ஜெட் போட்டுவிட்டு ஹீரோவாக மலையாளத்து பிருத்விராஜை போட முடிவெடுத்து அவரிடம் பேசினார். தம்பி ரூ. 25 லட்சம் கேட்கவே, கும்பிடு போட்டு அனுப்பிவிட்டு வேறு ஹீரோவைத் தேடிக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் படத்துக்கான பைனான்ஸ் தேடும் முயற்சிகளில் இறங்கினார். மன்னார்குடி மகா சக்தி வாய்ந்தவர்கள் மத்தியில் அலைந்து, திரிந்ததும் பைனான்சுக்குத் தானாம். நமக்கு என்றால் அள்ளித் தருவார் என்று நம்பியிருந்த விந்தியாவுக்கு அவர்களிடம் இருந்து, பாசிட்டிவ்வான பதில் வரவில்லை.

சொந்தக் காசும் பெரிதாக இல்லாததால் விந்தியா குழம்பி நிற்க, இப்போ எதுக்கு சொந்தப் படம் என்று வேண்டியவர்கள் பயமுறுத்திவிட்டார்களாம்.


ரம்பாவைப் பார்த்தேளா? என்னாச்சு? ஒரே ஒரு படம் எடுத்தார், அத்தோடு அவர் காலி, கையில் இருந்த பணம் போச்சு, மார்க்கெட்டும் போச்சு, எல்லாம் போச்சு, கோர்ட்டுக்கு நடையாய் நடக்கிறார், உங்களுக்கு அந்த நிலை வர வேண்டுமா என்று கேட்டு விந்தியாவை விக்கித்து நிற்க வைத்துள்ளார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதையெல்லாம் கேட்டு ரொம்பவே குழம்பிப் போயுள்ள விந்தியா, எதற்கு வம்பு, இப்போதைக்கு சொந்தப் படம் வேண்டாம், அப்புறம் பார்ப்போம், இப்போதைக்கு வர்ற வாய்ப்புகளை வாரிப் போட்டு முடிஞ்சவரை கஜானாவை நிரப்புவோம் என்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்துள்ளாராம்.

இதனால் விந்தியா ஆரம்பித்த படக் கம்பெனிக்கு திண்டுக்கல் பூட்டாகப் பார்த்து போட்டுவிட்டாராம்.

முடிந்தவரை சினிமா, சிங்கிள் பாட்டு, டிவி விளம்பரம், கடை திறப்பு, கலை நிகழ்ச்சி என சுற்றி வந்து பெட்டியை நிறைத்துக் கொண்டு அப்புறம் சொந்தமாக படம் எடுத்து ஹீரோயினாக மாறத் திட்டமிட்டுள்ளாராம்.


இப்போது நடித்து வரும் அழகு நிலையம் படத்தில் விந்தியாவுக்கு என்ன கேரக்டர் தெரியுமோ?. ஆண்களுக்கு செக்ஸ் ஆசையைத் தூண்டிவிட்டு, கட்டி உருண்டு, பின்னர் கொலை செய்வதாம்.

இதில் அழகேஸ்வரி என்ற கேரக்டரில் (புவனேஸ்வரி இல்லீங்கோ) பின்னி எடுத்து வருகிறாராம் விந்தியா. துணைக்கு சொர்ணமால்யாவாம்.

துணுக்கு:

விந்தியாவுக்கு எல்லாமுமான அருண், ஜீவாவை வைத்து சொந்தமாக ஒரு படம் எடுக்கப் போகிறாராம். மேனேஜர் என்று கூறப்படும் இவருடன் தான் விந்தியா வசித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X