ஹீரோயின்

By Staff

சமீப காலமாக தமிழகத்தில் ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர் சினிமாக்காரர்கள்.

தங்களது படம் ரிலீஸ் ஆகியிருக்கும் தியேட்டருக்கு படத்தின் ஹீரோ, ஹீரோயினை அழைத்துச் செல்வது.

இடைவேளையிலோ அல்லது படம் முடிந்த பின்போ ரசிகர்களுடன் ஒரு நேர்காணல் நடத்துவது. மிகவும்அரிதாகவே நடந்து வந்த இந்த வித்தியாசமான பட பிரமோஷன் டெக்னிக் இப்போது கிட்டத்தட்ட எல்லாபடங்களுக்குமே நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் படத்துக்கு ஏகத்துக்கும் விளம்பரம் கிடைத்து வருகிறது. இதனால் பொங்கலுக்கு வெளியானபடங்களில் விருமாண்டி தவிர மற்ற 4 படங்களின் நாயகர்களும், நாயகிகளும் தமிழகத்தின் பலதியேட்டர்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டனர்.

இப்போது அந்த வேலையைத் தொடங்கியிருப்பது விந்தியா. சமீபத்தில் வெளியாகி விடலைகளிடம் பெரும்வரவேற்பைப் பெற்றும், மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் ஓடிக் கொண்டிருக்கும் வயசுப் பசங்கபடத்தை தியேட்டர், தியேட்டராகப் போய் பிரமோட் செய்து வருகிறார் விந்தியா.

படத்தில் மகா பயங்கரமான கவர்ச்சியால் விந்தியா கலக்கியிருப்பது தெரிந்த விஷயம். படத்தில் இளவட்டங்கள்மூன்று பேரை கவர்ச்சியால் சுண்டி இழுத்து, தனது வயோதிகக் கணவரைக் கொலை செய்யச் சொல்கிறார் விந்தியா.இதைச் செய்தால் அவர்களுடன் இளமை விளையாட்டு விளையாடுவதாய் உறுதியளிக்கிறார். இப்படிப் போகிறதுவிவஸ்தை கெட்ட கதை.

கடந்த இரு நாட்களாக இந்தப் படம் ஓடும் தர்மபுரி, திருச்செங்கோடு தியேட்டர்களிலும் சேலம் தியேட்டரிலும்விந்தியா வந்து நிற்க ரசிகர்கள் குஷியாகிப் போய்விட்டனர்.

பலத்த ஆராவாரத்துக்கு இடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு விந்தியா பதில் சொன்னார். சங்கமம் படத்தில்கேரக்டர் ரோலில் நடித்தேன். வயசுப் பசங்க படத்தில் கிளாமர் ரோலில் நடித்துள்ளேன். விந்தியா என்றால் எல்லாகதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடிப்பவர் என்று பெயர் வாங்க வேண்டும். ரஜினியுடன் நடிக்கவும்ஆசைப்படுகிறேன்.

நான் டிவியில் நடித்தது பெரிய தப்பு. இனி அந்தத் தப்பை செய்ய மாட்டேன். சினிமாவில் கவர்ச்சி மிகத் தேவை.இதனால் அப்படி நடித்துத் தான் ஆக வேண்டும்.

இப்போது சேட்டை, கன்னிநிலா, காதல் பண்ணும் வயசு ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

எனக்குப் பிடித்தவரையே நான் திருமணம் செய்து கொள்வேன். தெரியாத ஒரு நபருக்கு கழுத்தை நீட்டமாட்டேன். ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். எதையும் அந்தந்த வயதில் அனுபவித்து விட வேண்டும்.அவ்வாறு செய்யாமல் போய் விட்டதே என்று பின்னால் வருந்தும் நிலைக்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்றுவிந்தியா ஏகத்துக்கும் அடுக்க ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டர்களை அலறடித்தது.

விந்தியாவுடன், வயசுப் பசங்களில் நடித்த லில்லி, புவனா, நடிகர் அனுஷ், வில்லன் நடிகர் கணேஷ் ஆகியோரும்வந்திருந்தனர்.

விந்தியாவிடம் ரசிகர்கள் அதிகப்படியாகக் கேட்ட கேள்வி இது தான்.

நீங்க ஏன் இப்படி அநியாயத்துக்கு கவர்ச்சி காட்றீங்க?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X