»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

விந்தியா அன்று
பெற்றோராலேயே தவறான பாதைக்குத் தள்ளப்படும் நிலை வந்ததால், மேனேஜருடன் தனியே வசித்து வந்தார்விந்தியா. இப்போது அவரை விட்டும் பிரிந்து விட்டார் என்கிறார்கள்.

தனியே வந்துவிட்ட விந்தியா, நாலு காசு பார்க்கும் எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார்.

அதனால் தான் இந்தக்கவர்ச்சித் தாண்டவமாம். மிக நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்த சான்ஸ் இது என்பதால் வயசுப் பசங்களில்குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி வந்தாலும், எடையைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.கடுமையான உடற்பயிற்சியால் சுமார் 15 கிலோ எடையைக் குறைத்திருக்கிறாராம்.

இதனால் சிக் ஆகிவிட்டதாகக் கருதும் விந்தியா, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார்.

மெலிந்து விட்டதனது தோற்றத்துடன் முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களைச் சந்தித்தும் சான்ஸ் கேட்டு வருகிறார்.

இந்த முயற்சிகள் பலனளிக்கவும் ஆரம்பித்துள்ளன லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் நடிக்கும் சேட்டை என்றபடத்தில் இவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளதாம்.

மேலும் சிலரும் வாய்ப்புத் தருவதாகஉறுதியளித்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சந்தோஷத்துல மறுபடியும் உடம்பு ஏறிடாமா பார்த்துங்க மேடம்.. !


விந்தியா இன்று
Please Wait while comments are loading...