கார் டிக்கி முழுக்க சரக்கு.. சனிக்கிழமை நைட்டை அமலா பால் மஜாவா கொண்டாடிருக்காங்க ப்பா
திருவனந்தபுரம்: தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அமலா பால். மைனா படத்தில் கிடைத்த மெகா ஹிட்டை அடுத்து விஜய்யுடன் தலைவா, ஆர்யாவுடன் வேட்டை படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. சூழல் இப்படி இருக்க இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அவர்; அடுத்ததாக ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். இரண்டு பேரும் ஜாலியாக வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் அமலாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ட்ரெண்டாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த அமலா பால் முதல் படத்திலேயே சர்ச்சைகளை சந்தித்தார். சிந்து சமவெளி படத்தின் கதைக்கள் விவகாரமாக இருந்ததால் அந்த சர்ச்சை வெடித்தது. முதல் படமே பிரச்னையை சந்தித்ததால் கண்டிப்பாக அமலா பாலின் கரியர் அவ்வளவுதான் என்றுதான் எல்லோராலும் கணிக்கப்பட்டது. ஆனால் பிரபு சாலமன் இயக்கத்தில் அவர் நடித்த மைனா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்போதிருந்து அமலாவுக்கென்று வாய்ப்புகள் வரிசையாக வர ஆரம்பித்தன. விஜய்யுடன் தலைவா படத்தில் எல்லாம் நடித்தார்.

திருமணமும், விவாகரத்தும்: அப்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டது. விஜய்யின் குடும்பம் ரொம்பவே பாரம்பரியமான குடும்பம். அந்தக் குடும்பத்து மருமகளாக அமலா பால் செட் ஆவாரா என்ற சந்தேகம்தான் பலருக்கும் இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்கள் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து நடித்ததுதான் பிரச்னைக்கு முழு காரணமும் என சொல்லப்பட்டது. அமலா பாலை பிரிந்த விஜய் அடுத்ததாக ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அமலாவுக்கும் இரண்டாவது திருமணம்: அதேபோல் அமலா பாலும் இரண்டாவது முறை காதலில் விழுந்தார். ஜகத் தேசாய் என்பவரை கோவாவில் பார்த்த அவர்; பார்த்ததும் காதலில் விழுந்தார். அதுமட்டுமின்றி அறிமுகமான புதிதிலேயே தான் கர்ப்பமாகிவிட்டதாகவும்; வேறு வழியில்லாமல் திருமணம் செய்துகொண்டோம் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அமலாவுக்கும், ஜகத் தேசாய்க்கும் இலை என்ற ஒரு மகனும் பிறந்தார். இப்போது அவர்கள் ஜாலியாக வாழ்ந்துவருகிறார்கள்.
நடிப்பை நிறுத்திய அமலா பால்?: இதற்கிடையே கர்ப்பமாக இருந்தபோதும் அமலா பால் ஆடு ஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். பிள்ளை பிறந்த பிறகு மொத்தமாகவே சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார். அநேகமாக அவர் இப்படியே நடிப்பை நிறுத்திவிட்டு குழந்தையையும், குடும்பத்தையும் கவனிக்கும் இல்லத்தரசியாக மாறிவிடுவாரோ என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் அதீதமாக எழுந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாகவும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சனிக்கிழமை இரவை அமலா பால் மஜாவாக கொண்டாடியிருக்கிறார். அதாவது அவர் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் காரின் டிக்கி திறக்கப்படுகிறது. அதற்குள் பெட்டி நிறைய மதுபானம் இருக்கிறது. இதை பகிர்ந்து Saturday Night என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, அமலா பால் செம மஜாவாக வீக் எண்ட் பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
